தலைக்கு எண்ணெய் தேய்க்கும் போது இந்த தப்பை மட்டும் பண்ணாதீங்க - டாக்டர் மோனிஷா டிப்ஸ்
தலைக்கு எண்ணெய் தேய்க்கும் போது என்ன தவறுகளை செய்யக் கூடாது என்று மருத்துவர் மோனிஷா தெரிவித்துள்ளார். இவற்றை தொடர்ச்சியாக செய்யும் போது அவை முடி உதிர்வு பிரச்சனையை அதிகரிக்கும் என்று அவர் கூறியுள்ளார்.
தலைக்கு எண்ணெய் தேய்க்கும் போது என்ன தவறுகளை செய்யக் கூடாது என்று மருத்துவர் மோனிஷா தெரிவித்துள்ளார். இவற்றை தொடர்ச்சியாக செய்யும் போது அவை முடி உதிர்வு பிரச்சனையை அதிகரிக்கும் என்று அவர் கூறியுள்ளார்.
இன்றைய சூழலில் தலைக்கு எண்ணெய் தேய்க்கும் பழக்கம் நிறைய பேரிடம் இல்லை. முடி வளர்ச்சியை அதிகரிக்க எண்ணெய் பயன்படுவது இல்லை என்று ஒரு தரப்பினர் கூறுகின்றனர். எனினும், உடலில் இருக்கும் உஷ்ணத்தை தணிக்க எண்ணெய் தேய்ப்பது அவசியம் என்று சிலர் கூறுகின்றனர்.
Advertisment
அவ்வாறு எண்ணெய் தேய்ப்பவர்களும் அதனை சரியான முறையில் பின்பற்றுவது கிடையாது. தொடர்ச்சியாக தவறான வகையில் தலைக்கு எண்ணெய் தேய்த்தால் தலை முடி உதிர்வு அதிகரிக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
அதன்படி, தலைக்கு எண்ணெய் தேய்க்கும் போது எவற்றை எல்லாம் செய்யக் கூடாது என்று மருத்துவர் மோனிஷா அறிவுறுத்துகிறார். ஒரு சிலர் இரவு எண்ணெய் தேய்த்து விட்டு காலை எழுந்து குளிக்கும் பழக்கத்தை கடைபிடிப்பார்கள்.
ஆனால், அவ்வாறு செய்யக் கூடாது என்று மருத்துவர் மோனிஷா குறிப்பிட்டுள்ளார். குளிப்பதற்கு சுமார் 20 நிமிடங்களில் இருந்து ஒரு மணி நேரத்திற்கு முன்னர் மட்டுமே தலைக்கு எண்ணெய் தேய்த்தால் போதுமானதாக இருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.
Advertisment
Advertisements
இது தவிர சூடாக இருக்கும் எண்ணெய்யை சிலர் தலைக்கு தேய்ப்பார்கள். ஆனால், இப்படி செய்யும் போது அவை சருமத்தில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என்பதால், அவ்வாறு செய்ய வேண்டாம் என்று அவர் கூறுகிறார்.
மேலும், தலையில் எண்ணெய் தேய்க்கும் போது அழுத்தம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. மெதுவாக விரல்களை வைத்து மசாஜ் செய்தால் போதும் என்று மருத்துவர் மோனிஷா தெரிவித்துள்ளார். இதேபோல், எண்ணெய் தேய்த்த பின்னர் தலை முடியை அதிகமாக சீவக் கூடாது என்று அவர் கூறியுள்ளார்.
ஏனெனில், அவ்வாறு செய்தால் தலை முடி மேலும் உதிரக் கூடும். அதன்படி, தலைக்கு எண்ணெய் தேய்க்கும் போது இது போன்ற தவறுகளை செய்யக் கூடாது என்று மருத்துவர் மோனிஷா தெரிவித்துள்ளார்.
நன்றி - Dr. Monisha Aravind Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.