வைட்டமின் இ எண்ணெய்யை சருமத்தில் யூஸ் பண்ணலாமா? டாக்டர் மோனிஷா விளக்கம்

வைட்டமின் இ எண்ணெய் மற்றும் மாத்திரையை சருமத்தில் பயன்படுத்தலாமா என்று மருத்துவர் மோனிஷா விளக்கம் அளித்துள்ளார். குறிப்பாக, யாரெல்லாம் இதனை பயன்படுத்த வேண்டாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வைட்டமின் இ எண்ணெய் மற்றும் மாத்திரையை சருமத்தில் பயன்படுத்தலாமா என்று மருத்துவர் மோனிஷா விளக்கம் அளித்துள்ளார். குறிப்பாக, யாரெல்லாம் இதனை பயன்படுத்த வேண்டாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

author-image
WebDesk
New Update
Vitamin E Capsule

வைட்டமின் இ மாத்திரை மற்றும் எண்ணெய்யை சரும பராமரிப்பு முறையில் பயன்படுத்தலாம் என்று தற்போது சிலர் கூறுகின்றனர். ஆனால், இவற்றை யாரெல்லாம் உபயோகிக்க வேண்டும் என்ற கேள்வி இருக்கிறது. மேலும், இவற்றை பயன்படுத்துவதன் மூலம் வேறு ஏதேனும் ஒவ்வாமை ஏற்படுமோ என்ற தயக்கமும் பலருக்கு இருக்கிறது.

Advertisment

அதன்படி, வைட்டமின் இ எண்ணெய்யை யாரெல்லாம் பயன்படுத்தலாம் என்று மருத்துவர் மோனிஷா விளக்கம் அளித்துள்ளார். சிலரது சருமம் ஏற்கனவே எண்ணெய் பசை நிறைந்து இருக்கும். இவ்வாறு இருப்பவர்கள் தங்கள் சருமத்தில் வைட்டமின் இ எண்ணெய்யை பயன்படுத்த தேவை இல்லை என்று அவர் கூறுகிறார்.

ஆனால், சிலரது சருமம் எண்ணெய் பசை இன்றி வறட்சியாக காணப்படும். இது போன்ற சருமம் கொண்டவர்கள் வைட்டமின் இ எண்ணெய்யை உபயோகிக்கலாம் என்று மருத்துவர் மோனிஷா பரிந்துரைக்கிறார். எனினும், சருமம் வறட்சியாக இருப்பவர்கள் சில சரும பராமரிப்பு முறையை பின்பற்றி வருவார்கள்.

உதாரணத்திற்கு, நைட் க்ரீம், சன் ஸ்க்ரீன், மாய்ஸ்சுரைசர் போன்ற பொருட்களை பயன்படுத்தி வருவார்கள். இந்த பொருட்களில் பெரும்பாலும் வைட்டமின் இ எண்ணெய் சேர்க்கப்பட்டிருக்கும். அவ்வாறு இருக்கும் பட்சத்தில், கூடுதலாக மற்றொரு வைட்டமின் இ எண்ணெய்யை பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என்று மருத்துவர் மோனிஷா குறிப்பிட்டுள்ளார்.

Advertisment
Advertisements

இது தவிர சருமம் வறட்சியாக இருக்கும் போது மட்டுமே வைட்டமின் இ எண்ணெய்யை பயன்படுத்தலாம். எண்ணெய் பசை காரணமாக சருமத்தில் அடிக்கடி பருக்கள் போன்றவை வரும் என்றால், அவர்கள் வைட்டமின் இ எண்ணெய் பயன்படுத்துவதை தவிர்த்து விடலாம் என்று மருத்துவர் மோனிஷா அறிவுறுத்துகிறார்.

நன்றி - Dr. Monisha Aravind Youtube Channel

 

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.

Is vitamin e face serum good for you?

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: