தினமும் ஒரு டம்ளர் மோர் குடிங்க… கெட்ட கொழுப்பைக் குறைக்கும்; டாக்டர் மைதிலி

தினமும் ஒரு கிளாஸ் மோர் குடிப்பதனால் ஏற்படும் நன்மைகள் குறித்து மருத்துவர் மைதிலி தெரிவித்துள்ளார். இதன் மூலம் கெட்ட கொழுப்பை குறைக்க முடியும் என்று அவர் விளக்கம் அளித்துள்ளார்.

தினமும் ஒரு கிளாஸ் மோர் குடிப்பதனால் ஏற்படும் நன்மைகள் குறித்து மருத்துவர் மைதிலி தெரிவித்துள்ளார். இதன் மூலம் கெட்ட கொழுப்பை குறைக்க முடியும் என்று அவர் விளக்கம் அளித்துள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Used of buttermilk

ஏப்ரல் மாதம் தொடங்குவதற்கு முன்பாகவே வெயிலின் தாக்கம் மிகத் தீவிரமாக இருக்கிறது. இதனால் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க வேண்டியது மிகவும் அவசியம் ஆகும். அந்த வகையில் தினமும் ஒரு கிளாஸ் மோர் குடிப்பதனால் நமக்கு ஏற்படும் நன்மைகள் குறித்து மருத்துவர் மைதிலி விளக்கம் அளித்துள்ளார்.

Advertisment

உடலுக்கு தேவையான ஸ்டாமினாவை உடனடியாக உயர்த்தும் ஆற்றல் மோருக்கு இருக்கிறது. ஏனெனில், மோரில் வைட்டமின் பி ஊட்டச்சத்து அதிகமாக இருக்கிறது. மேலும், நீர்ச்சத்து குறைபாட்டையும் மோர் சரி செய்கிறது. சருமத்தில் ஈரப்பதத்தை தக்க வைப்பதற்கும் இது பயன்படுகிறது.

தினசரி ஒரு கிளாஸ் மோர் குடித்து வந்தால் எலும்பு மற்றும் பற்கள் உறுதியாகும். மேலும், இதில் கால்சியம் சத்து இருப்பதால் பிற்காலத்தில் ஏற்படக் கூடிய எலும்பு தொடர்பான பாதிப்புகளையும் கட்டுப்படுத்துகிறது. குறிப்பாக, ஒரு கிளாஸ் மோரில் 116 மில்லி கிராம் கால்சியம் இருக்கிறது. 

நிறைய பேருக்கு சாப்பிட்டதும் நெஞ்சு எரிச்சல் போன்ற தொல்லைகள் இருக்கும். இதனைக் கட்டுப்படுத்தும் லக்டிக் ஆசிட் மோரில் காணப்படுகிறது. குடல் பகுதியில் இருக்கும் நல்ல பக்டீரியாக்களை தக்கவைத்து, கழிவுகளை வெளியேற்றவும் மோர் பயன்படுகிறது.

Advertisment
Advertisements

மலச்சிக்கல், செரிமான கோளாறுகளுக்கும் மோர் மருந்தாக செயல்படுகிறது. உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகளின் அளவை அதிகரிக்க விடாமல் மோர் தடுப்பதால், உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் இதனை தினசரி எடுத்துக் கொள்ளலாம்.

தலை முடி உதிர்வை குறைக்கும் ஆற்றலும் மோரில் இருக்கிறது. மேலும், முடியை அடர்த்தியாக இது வளரச் செய்கிறது. உடலில் இருக்கும் உஷ்ணத்தை குறைப்பதால் முடி உதிர்வு பிரச்சனைக்கும் இது தீர்வாக அமைகிறது.

உடலுக்கு இத்தகைய மருத்துவ நன்மைகள் அளிக்கக் கூடிய மோரை, தினசரி ஒரு கிளாஸ் குடிக்கலாம் என்று மருத்துவர் மைதிலி அறிவுறுத்துகிறார்.

நன்றி - Dr.Mythili - Ayurveda Doctor & Dietitian Youtube Channel

 

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.

Get to know the health benefits of buttermilk Best ingredients to add in your buttermilk

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: