பலருக்கு மூட்டு வலிகள் கடுமையாக இருக்கும். இந்த வலிகள் மற்றும் வீக்கத்தை பிரண்டை மூலம் எப்படி குணப்படுத்துவது என மருத்துவர் மைதிலி குறிப்பிட்டுள்ளார். அதன்படி, பிரண்டை இலைகள் வலி நிவாரணியாக செயல்படுகிறது என அவர் தெரிவித்துள்ளார்.
அதற்காக, ஃப்ரெஷ்ஷாக இருக்கும் பிரண்டை இலைகளை தண்ணீரில் கழுவி எடுத்துக் கொள்ளலாம். பின்னர், இந்த இலைகளை சுமார் 3 நாட்களுக்கு நன்றாக வெயிலில் காய வைக்க வேண்டும். இவ்வாறு வெயிலில் காய்ந்த பின்னர், அவற்றை மிக்ஸியில் போட்டு பொடியாக அரைத்து எடுத்துக் கொள்ளலாம்.
இந்த பிரண்டை பொடியை 100 கிராமும், சீரகப் பொடியை 10 கிராமும், மிளகு பொடியை 10 கிராமும் சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளலாம். இந்த பொடியை உடல் சோர்வு இருப்பவர்கள் மற்றும் கை, கால் வலியால் அவதிப்படுனபர்கள் சாப்பிடலாம்.
அதன்படி, 2 கிராம் பொடியை அரை கிளாஸ் சுடுதண்ணீரில் போட்டு காலை நேரத்தில் குடிக்கலாம். குறிப்பாக, காலை உணவு எடுத்துக் கொள்வதற்கு சுமார் 30 நிமிடங்களுக்கு முன்பாக இதை குடிக்க வேண்டும். இவ்வாறு 45 நாட்களுக்கு இதை தொடர்ந்து குடிக்க வேண்டும்.
இவை வலி நிவாரணியாக செயல்படுவது மட்டுமல்லாமல், உடலின் இரண்டு உறுப்புகளை தூய்மைப்படுத்த உதவுகிறது. அந்த வகையில், இருதயத்திற்கு இரத்த ஓட்டத்தை இது சீராக்குகிறது. மேலும், மூளையை சீராக இயங்க வைக்கவும் உதவுகிறது.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.