தலைமுடி அடர்த்தியா, கருமையா வளர… செம்பருத்தி இலையுடன் இதை சேர்த்து தடவுங்க; டாக்டர் மைதிலி
தலை முடி உதிர்வை தடுக்கவும், முடி வளர்ச்சியை அதிகரிக்கவும் பின்பற்ற வேண்டிய வழிமுறை குறித்து மருத்துவர் மைதிலி விளக்கம் அளித்துள்ளார். அதனை இந்தக் குறிப்பில் பார்க்கலாம்.
தலை முடி உதிர்வை தடுக்கவும், முடி வளர்ச்சியை அதிகரிக்கவும் பின்பற்ற வேண்டிய வழிமுறை குறித்து மருத்துவர் மைதிலி விளக்கம் அளித்துள்ளார். அதனை இந்தக் குறிப்பில் பார்க்கலாம்.
இளைஞர்களிடையே நாளுக்கு நாள் முடி உதிர்வு பிரச்சனை அதிகரித்து வருகிறது. இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்காக மருத்துவர்களிடம் செல்பவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து காணப்படுகிறது.
Advertisment
இந்த சுழலில் செம்பருத்தி இலைகளை பயன்படுத்தி முடி உதிர்வு பிரச்சனையை போக்கும் வகையில் ஹேர்பேக் தயாரித்து பயன்படுத்தலாம் என்று மருத்துவர் மைதிலி தெரிவித்துள்ள்ளார். மேலும், இந்த ஹேர்பேக் தயாரிக்கும் முறை குறித்தும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
செம்பருத்தி இலைகளில் வைட்டமின் சி ஊட்டச்சத்து இருக்கிறது. இது நம் உடலில் கொலஜன் உற்பத்தியை அதிகப்படுத்துகிறது. இதன் மூலம் சருமம் மற்றும் தலை முடி ஆரோக்கியமாக இருக்கும்.
அந்த வகையில் இந்த ஹேர்பேக் தயாரிப்பதற்காக இரண்டு கைப்பிடி அளவிற்கு செம்பருத்தி இலைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். இத்துடன் ஒரு கைப்பிடி கறிவேப்பிலையையும் சேர்த்து நன்றாக கழுவ வேண்டும்.
Advertisment
Advertisements
இந்த இரண்டையும் தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் போட்டு பசை பதத்திற்கு அரைக்க வேண்டும். இவ்வாறு செய்தால் இயற்கையான ஹேர்பேக் தயாராகி விடும். இதனை தலைமுடியின் வேர்ப்பகுதியில் இருந்து நுனிப்பகுதி வரை தேய்க்க வேண்டும்.
இதையடுத்து சுமார் 45 நிமிடங்கள் கழித்து சுடுதண்ணீரில் குளிக்க வேண்டும். குளிக்கும் போது சீவக்காய் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என மருத்துவர் மைதிலி தெரிவித்துள்ளார். இந்த ஹேர்பேக்கை வாரத்திற்கு ஒரு முறை பயன்படுத்தலாம்.
இவ்வாறு தொடர்ச்சியாக பின்பற்றும் போது முடி உதிர்வு பிரச்சனை குறையும். மேலும், முடியின் வளர்ச்சியும் அடர்த்தியாக இருக்கும். எனவே, இரசாயனங்கள் சேர்க்கப்பட்ட பொருட்களை பயன்படுத்துவதை விட, இது போன்ற இயற்கையான ஹேர்பேக்கை உபயோகிக்கலாம் என்று மருத்துவர் மைதிலி அறிவுறுத்துகிறார்.
நன்றி - Dr.Mythili - Ayurveda Doctor & Dietitian Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.