உங்க கண்ணில் இந்த அறிகுறி... உடனே கல்லீரல் பரிசோதனை பண்ணுங்க: டாக்டர் நிஷா
உங்கள் கல்லீரலில் ஏதாவது பிரச்சனை இருந்தால் அதனை எப்படி தெரிந்து கொள்வது என மருத்துவர் நிஷா விளக்கம் அளித்துள்ளார். இதனை கண்டறிவதற்கான விளக்கத்தையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சில உடல் நல பாதிப்புகள் பெரிய அளவில் மாற்றம் அடையும் போது தான் தெரிய வரும். அதுவரை எந்த விதமான பிரச்சனையும் இல்லை என்று பொதுமக்கள் நினைத்துக் கொண்டிருப்பார்கள். சில உடல் நல பாதிப்புகள் தீவிரம் அடைவதற்கு முன்பாக சில அறிகுறிகள் இருக்கும். அதனை சரியாக கவனிக்க வேண்டும்.
Advertisment
அதனடிப்படையில், கல்லீரலில் ஏதேனும் பிரச்சனை இருந்தால் அதனை எவ்வாறு கண்டறியலாம் என்று மருத்துவர் நிஷா தெரிவித்துள்ளார். சிலருக்கு கண்கள் மஞ்சள் நிறமாக காட்சியளிக்கும். குறிப்பாக, சூரிய ஒளியில் பார்க்கும் போது கண்களில் வெள்ளையாக இருக்கும் பகுதி, சற்று மஞ்சள் நிறமாக காட்சியளிக்கும். இப்படி இருக்கும்பட்சத்தில் கல்லீரல் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என மருத்துவர் நிஷா அறிவுறுத்துகிறார்.
மேலும், சிலருக்கு வயிறு உப்புசமாக இருக்கும். திடீரென உடல் எடை அதிகரித்திருக்கும். இதில் சிலருக்கு உடல் எடை அதிகரிக்காமல், வயிறு மட்டும் உப்புசமாக இருக்கும். இது போன்ற அறிகுறிகள் யாருக்காவது இருந்தால், அவர்களும் கட்டாயம் கல்லீரலை பரிசோதிக்க வேண்டும்.
இரத்தக் குழாய்களில் அடைப்பு இருந்தால் வயிற்றின் வலதுபுறத்தில் வலி ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இது போன்ற நேரத்தில் செரிமான கோளாறு ஏற்படும். எனவே, அதிகப்படியான வலி அல்லது செரிமான கோளாறு தொடர்ச்சியாக இருந்தால் கல்லீரல் சோதனை மேற்கொள்வது அவசியம். இந்த வலியை சிலர் கற்கள் உருவாகி இருப்பதாக கருதுகின்றனர்.
Advertisment
Advertisements
எனவே, இது போன்ற அறிகுறிகள் உடலில் தென்பட்டால் அவற்றை சாதாரணமாக கருதாமல் உடனடியாக சம்பந்தப்பட்ட மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது அவசியம் ஆகும். பிரச்சனை சிறிதாக இருக்கும் போதே முறையான சிகிச்சைகள் மேற்கொண்டால் அதனை குணப்படுத்தி விடலாம்.
ஆனால், இவை தீவிரம் அடைந்தால் அதனை குணப்படுத்துவது சிரமம் ஆகிவிடும். அந்த வகையில் இது போன்ற அறிகுறிகளை அலட்சியம் செய்யக் கூடாது என மருத்துவர் நிஷா கூறுகிறார்.
நன்றி - Clair Veda Ayur Clinic Tamil Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.