கொஞ்சம் காரமா சாப்பிட்டாலே நெஞ்சு எரிகிறதா? உங்க இம்யூனிட்டி ரொம்ப வீக்; தீர்வு இதோ..! டாக்டர் நிஷா
குடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும் போது அவை என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும், அதற்கான தீர்வு குறித்தும் மருத்துவர் நிஷா தெரிவித்துள்ளார்.
சிறிதளவு காரம் சாப்பிட்டாலே பலருக்கு நெஞ்சு எரிச்சல் பிரச்சனை இருப்பதாக கூறுகின்றனர். இதன் அடுத்தகட்டமாக சிலருக்கு காரம் சாப்பிடும் போது நெஞ்சில் வலியும் ஏற்படுவதாக கூறப்படுகிறது. இந்த பிரச்சனைகளுக்கான காரணத்தை முதலில் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம் என மருத்துவர் நிஷா தெரிவித்துள்ளார்.
Advertisment
குடலில் போதுமான அளவு நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் ஆரோக்கியம் இல்லாத காரணத்தினால் இத்தகைய பிரச்சனைகள் ஏற்படக் கூடும் என அவர் வலியுறுத்துகிறார். இதனை சீரமைப்பதற்கு வீட்டு வைத்தியத்தை மேற்கொள்ளலாம் என்று மருத்துவர் நிஷா பரிந்துரைத்துள்ளார்.
அதன்படி, நன்னாரியை தண்ணீரில் கொதிக்க வைத்து, அந்த நீரை சுமார் இரண்டு முதல் மூன்று மாதங்களுக்கு தொடர்ச்சியாக குடிக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். குறிப்பாக, நாள்தோறும் நாம் குடிக்கும் சாதாரண தண்ணீருக்கு மாற்றாக இந்த நன்னாரி தண்ணீரை பருக வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இப்படி தொடர்ச்சியாக செய்வதன் மூலம் குடலின் நோய் எதிர்ப்பு சக்தி மேம்படும் எனக் கூறப்படுகிறது. இதன் மூலம் காரம் சாப்பிடுவதால் ஏற்படும் நெஞ்சு எரிச்சல், நெஞ்சு வலி போன்ற பிரச்சனைகளை குணப்படுத்த முடியும் என்று மருத்துவர் நிஷா தெரிவித்துள்ளார்.
Advertisment
Advertisements
மேலும், இரசாயனங்கள் எதுவும் இத்துடன் சேர்க்காததால் வேறு மாதிரியான பக்கவிளைவுகள் ஏற்படும் என்ற அச்சமும் தேவையில்லை.
நன்றி - Clair Veda Ayur Clinic Tamil Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.