பிரெஸ்ட் கேன்சர்? உங்க கிச்சனில் இருக்கும் இந்தப் பொருளை தூளாக்கி மார்பில் தடவுங்க: டாக்டர் நித்யா
புற்றுநோய் பாதிப்பில் இருந்து நம்மை பாதுகாக்க வேண்டுமென்றால் சில உணவு முறை மாற்றம் மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் என்று மருத்துவர் நித்யா தெரிவித்துள்ளார்.
புற்றுநோய் பாதிப்பில் இருந்து நம்மை பாதுகாக்க வேண்டுமென்றால் சில உணவு முறை மாற்றம் மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் என்று மருத்துவர் நித்யா தெரிவித்துள்ளார்.
புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக அதற்கான சிகிச்சையை தொடங்க வேண்டும் என்று மருத்துவர் நித்யா தெரிவித்துள்ளார். இதனை தாமதப்படுத்தினால் நோயின் தீவிரம் மிக அதிகமாக மாறி விடும் என்று மிஸ்டர் லேடிஸ் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Advertisment
குறிப்பாக, தொண்டை, குடல் புற்றுநோய் மற்றும் பெண்களிடையே மார்பக புற்றுநோய் இன்றைய சூழலில் அதிகமாக பரவி வருகிறது. இது போன்ற பாதிப்புகளில் இருந்து தற்காத்துக் கொள்ள சில உணவு முறை மாற்றங்கள் மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களை பின்பற்றலாம் என்று அவர் அறிவுறுத்துகிறார்.
அதன்படி, மார்பக புற்றுநோயை தடுப்பதற்கு மஞ்சளை பயன்படுத்தலாம் என்று மருத்துவர் நித்யா தெரிவித்துள்ளார். இதற்காக மஞ்சளை நன்றாக அரைத்து பொடியாக்கிக் கொள்ள வேண்டும். இதனை மார்பு மீது தடவி வந்தால், ஆரம்ப நிலையில் இருக்கும் புற்றுநோயை குணப்படுத்தலாம் என்று அவர் கூறுகிறார்.
அடுத்தபடியாக இஞ்சி, சுக்கு, மஞ்சள் ஆகியவற்றை நம்முடைய அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதேபோல், அன்னாசிப்பூவையும் சமையலில் சேர்க்கலாம். இதனை பொடியாக அரைத்து கால் டீஸ்பூன் அளவிற்கு தேனில் கலந்தும் குடிக்கலாம்.
Advertisment
Advertisements
இன்றைய சூழலில் மலச்சிக்கல் பாதிப்பு காரணமாக மலக்குடலில் கேன்சர் ஏற்படுவதாக மருத்துவர் நித்யா தெரிவித்துள்ளார். இதனால், கூடுமானவரை மலச்சிக்கல் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அவர் அறிவுறுத்துகிறார்.
இது தவிர வைட்டமின் சி நிறைந்திருக்கும் பழங்கள் மற்றும் காய்கறிகளை எடுத்துக் கொள்ளலாம். பிளாஸ்டிக் கப்புகளில் டீ குடிப்பது மற்றும் பிளாஸ்டிக் பைகளில் உணவுகளை வாங்கி வருவதை தவிர்க்க வேண்டும். இதுவும் புற்றுநோய் ஏற்படுவதற்கு ஒரு வாய்ப்பாக அமைந்து விடும்.
இவை அனைத்தையும் பின்பற்றுவதன் மூலம் புற்றுநோய் பாதிப்பில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ள முடியும் என்று மருத்துவர் நித்யா தெரிவித்துள்ளார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.