இந்த 2 பொடியுடன் தேங்காய் பால் சேர்த்த பேஸ்ட்... இளம் நரைக்கு இப்படி குட்பை சொல்லுங்க: டாக்டர் நித்யா டிப்ஸ்
இளநரை, முடி உதிர்வு பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கும் விதமாக சில ஹோம்மேட் ஹேர்பேக்கை பயன்படுத்தலாம் என்று மருத்துவர் நித்யா தெரிவித்துள்ளார். அதற்கான ஒரு ஹேர்பேக்கை அவர் பரிந்துரைத்துள்ளார். அதனை தற்போது காணலாம்.
இளநரை, முடி உதிர்வு பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கும் விதமாக சில ஹோம்மேட் ஹேர்பேக்கை பயன்படுத்தலாம் என்று மருத்துவர் நித்யா தெரிவித்துள்ளார். அதற்கான ஒரு ஹேர்பேக்கை அவர் பரிந்துரைத்துள்ளார். அதனை தற்போது காணலாம்.
இளநரை, முடி உதிர்வு போன்ற பிரச்சனைகளுக்காக மருத்துவர்களிடம் செல்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தலை முடி என்பதை அழகியல் சார்ந்த விஷயமாக பார்க்காமல், அதனை ஆரோக்கியத்துடன் தொடர்புடையதாக கருத வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
Advertisment
மேலும், குறிப்பிட்ட சில காரணங்களால் இன்றைய இளம் தலைமுறையினரிடையே முடி உதிர்வு மற்றும் இளநரை பாதிப்பு அதிகரித்திருப்பதாக கூறப்படுகிறது. அந்த வகையில், வாழ்க்கை முறை மாற்றம், உணவு முறை மாற்றம், பொடுகு பிரச்சனை, தூக்கமின்மை மற்றும் மன அழுத்தம் உள்ளிட்ட சில காரணங்களின் வெளிப்பாடு தான் முடி உதிர்வு என்று கூறப்படுகிறது.
இவை மட்டுமின்றி முடியை சரியாக பராமரிக்காவிட்டாலும், முடி உதிர்வு மற்றும் இளநரை பாதிப்பு இருக்கும். இதற்காக, ஹேர் ஆயில், சீரம், ஷம்பூ போன்ற பொருட்களை சில பயன்படுத்துவார்கள். ஆனால், இவற்றில் சேர்க்கப்பட்டிருக்கும் இரசாயனங்களால் வேறு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமோ என்ற தயக்கமும் பலரிடத்தில் இருக்கும்.
அந்த வகையில் வீட்டில் தயாரிக்க கூடிய எளிமையான ஹேர்பேக்கை மருத்துவர் நித்யா பரிந்துரைத்துள்ளார். இதற்காக நெல்லிக்காய் பொடி மற்றும் கடுக்காய் பொடியை சம அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். இவற்றுடன் தேங்காய் பால் சேர்த்து பசை பதத்திற்கு நன்றாக கலக்க வேண்டும்.
Advertisment
Advertisements
இவ்வாறு செய்தால் நம் தலை முடிக்கு தேவையான ஹேர்பேக் தயாராகி விடும். இதனை நம் தலையில் தேய்த்து விட்டு சுமார் 20 நிமிடங்கள் கழித்து கழுவி விடலாம். இப்படி தொடர்ந்து செய்யும் போது முடி உதிர்வு, இளநரை, பொடுகு தொல்லை போன்ற பிரச்சனைகள் குணமடையும் என்று மருத்துவர் நித்யா தெரிவித்துள்ளார்.
நன்றி - ASK INFORMATION Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.