Advertisment

தூக்கத்தில் விந்து வெளியேறுதல்; விறைப்பு குறைபாடு: டாக்டர் நித்யா சொல்லும் தீர்வு

நிறைய ஆண்களுக்கு இருக்கக் கூடிய தூக்கத்தில் விந்து வெளியேறும் பிரச்சனை குறித்தும், அதற்கான தீர்வு குறித்தும் மருத்துவர் நித்யா தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Sperm issue

பல பேருக்கு துக்கத்தில் விந்தணுக்கள் வெளியேறுவதை பார்க்க முடியும். இது ஏற்படுவது இயல்பான விஷயம் தான் என மருத்துவர் நித்யா குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக, 15 முதல் 25 வயதுக்குட்பட்டவர்களுக்கு வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை இவ்வாறு ஏற்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisment

ஒவ்வொரு நாளும் ஆண்களின் உடலில் லட்சக்கணக்கான விந்தணுக்கள் உற்பத்தியாகி கொண்டு இருக்கும். சிலருக்கு விந்தணுக்கள் நீர்த்த மாதிரி காட்சியளிக்கும். இதுவும் உடல் நலத்திற்கு தீங்கானது தான்.

இவற்றை சரி செய்வதற்கு தினசரி கீரை வகைகளை நம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். முக்கியமாக தூதுவளை கீரை மற்றும் வெந்தயக் கீரையை பயன்படுத்த வேண்டும் என மருத்துவர் நித்யா தெரிவித்துள்ளார். இதன் மூலம் தூக்கத்தில் விந்து வெளியேறுவது கட்டுப்படும் என்றும், விந்தணுக்கள் கெட்டியாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சோயா பீன்ஸ்கள் உள்ளிட்ட தானிய வகைகளை புரதச் சத்திற்காக அவசியம் சாப்பிட வேண்டும். தினசரி உணவில் தயிர் இருப்பதையும் உறுதி செய்திட வேண்டும். சித்த மருத்துவத்தில் யானை நெருஞ்சி மருந்துகள் இது போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வளிப்பதாக மருத்துவர் நித்யா தெரிவித்துள்ளார்.

Advertisment
Advertisement

 

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.

Lifestyle changes to manage PCOS Simple lifestyle changes to boost fertility
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment