சித்த மருத்துவத்தை பொறுத்தவரை பல்வேறு மருந்துகளில் ஆவாரம் பூ பயன்படுத்தப்பட்டு வருவதாக மருத்துவர் நித்யா கூறுகிறார்.
பொங்கல் பண்டிகை சமயத்தில் ஆவாரம் பூ அதிகளவில் கிடைக்கும். கண்ணில் ஏற்படும் எரிச்சல், சருமம் தொடர்பான பிரச்சனைகள், சர்க்கரை நோய் என பலவற்றுக்கு ஆவாரம் பூ தீர்வாக அமைகிறது எனவும் மருத்துவர் நித்யா தெரிவித்துள்ளார்.
சித்த மருத்துவத்தில் ஆவாரை குடிநீர் என்ற பொருள் சர்க்கரை நோயாளிகளுக்கு மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் முதன்மையாக ஆவாரம் பூ சேர்க்கப்பட்டிருக்கும். இந்த பொடியை 5 கிராம் அளவிற்கு எடுத்து, மூன்று கிளாஸ் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விட வேண்டும்.
இந்த நீர் ஏறத்தாழ 1 கிளாஸ் அளவிற்கு வற்றியதும் அடுப்பில் இருந்து இறக்கி வைத்து ஆறவிட வேண்டும். அதன் பின்னர், இதனை குடிக்கலாம். குறிப்பாக தினமும் இரண்டு வேளை உணவுக்கு முன்னர் இதை குடிக்க வேண்டும் என மருத்துவர் நித்யா தெரிவித்துள்ளார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.