வயகரா மாத்திரை 100 சாப்பிட்ட சக்தி... இந்த மூலிகை பொருளை இப்படி யூஸ் பண்ணுங்க: டாக்டர் நித்யா
அஸ்வகந்தா மூலிகையின் பல்வேறு மருத்துவ குணங்கள் குறித்து மருத்துவர் நித்யா தெரிவித்துள்ளார். குறிப்பாக, ஆண்களின் விறைப்புத் தன்மை பிரச்சனையை இது சரி செய்வதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.
அஸ்வகந்தா மூலிகையின் பல்வேறு மருத்துவ குணங்கள் குறித்து மருத்துவர் நித்யா தெரிவித்துள்ளார். குறிப்பாக, ஆண்களின் விறைப்புத் தன்மை பிரச்சனையை இது சரி செய்வதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.
ஆண்களின் விறைப்புத் தன்மை பிரச்சனைக்கு தீர்வு அளிக்கும் விதமாக வயகரா மாத்திரைகள் செயல்படுகிறது என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். இதேபோல், இயற்கை மூலிகைகள் பலவற்றில் இருந்தும் இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காணலாம் என்று மருத்துவர் நித்யா தெரிவித்துள்ளார்.
Advertisment
மக்கள் மனதில் அஸ்வகந்தா என்பது இயற்கையான வயகரா என்று பதிவாகி விட்டதாக மருத்துவர் நித்யா கூறுகிறார். புற்றுநோய் செல்களை அழிப்பதில் தொடங்கி துக்கமின்மை பிரச்சனையை சீராக்குவது என அஸ்வகந்தாவிற்கு நிறைய மருத்துவ குணங்கள் இருக்கின்றன.
இது தவிர ஆண்களுக்கு இருக்கும் விறைப்புத் தன்மை குறைபாடு மற்றும் விந்தணுக்கள் குறைபாடு போன்ற பிரச்சனைகளுக்கும் அஸ்வகந்தா பயன்படுவதாக மருத்துவர் நித்யா தெரிவித்துள்ளார். குறிப்பாக, இதனை பயன்படுத்துவதற்கு என சில வழிமுறைகள் இருக்கின்றன.
பொதுவாக அஸ்வகந்தா பொடி கடைகளில் சாதாரணமாக கிடைக்கும். இதனை மருந்தாக எடுத்துக் கொள்வதற்கு முன்பாக பசும்பாலில் வேக வைத்து பயன்படுத்த வேண்டும் என்று மருத்துவர் நித்யா தெரிவித்துள்ளார். அதன்படி, அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதன் அடிப்பகுதியில் சிறிது பால் சேர்த்து கொதிக்க விட வேண்டும். அதன் மேற்புறத்தில் ஒரு வெள்ளைத் துணியில் அஸ்வகந்தா பொடியை போட்டு வேகவைத்த பின்னர் இதனை பயன்படுத்தலாம்.
Advertisment
Advertisements
இதனை சாதாரணமாக பாலில் கலந்து குடிக்கலாம் என்று மருத்துவர் நித்யா தெரிவித்துள்ளார். மேலும், இது டானிக் மற்றும் லேகியம் வடிவத்திலும் கிடைக்கிறது. இவற்றையும் வாங்கி பயன்படுத்தலாம். சர்க்கரை நோயாளிகள் இதனை சூரணமாக சுடுதண்ணீரில் கலந்து குடிக்கலாம்.
இதே போன்று சிட்டுக் குருவி லேகியம் ஆண்களின் விறைப்புத் தன்மையை அதிகரிக்கும் மருந்தாக பயன்படுவதாக பலர் கூறுவார்கள். இதிலும், அஸ்வகந்தா உள்ளிட்ட பல்வேறு மூலிகைகளை சேர்த்து லேகியம் வடிவில் வைத்திருப்பதாக மருத்துவர் நித்யா தெரிவித்துள்ளார்.
நன்றி - Milestone Media Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.