காலையில் வெறும் வயிற்றில் தேனுடன் இந்த கீரை சாறு; பெஸ்ட் இரும்புச் சத்து: டாக்டர் நித்யா
இரும்புச் சத்தின் பயன்கள் குறித்தும், அவற்றை எவ்வாறு நம் உணவுகள் மூலம் பெறுவது என்றும் மருத்துவர் நித்யா தெரிவித்துள்ளார். அவற்றை இந்த செய்திக் குறிப்பில் காணலாம்.
இரும்புச் சத்தின் முக்கியத்துவம் குறித்து பல்வேறு தகவல்களை மருத்துவர் நித்யா குறிப்பிட்டுள்ளார். மேலும், இரும்புச் சத்து இருக்கும் உணவு பொருட்களை அவர் பரிந்துரைத்துள்ளார்.
Advertisment
இரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்கள் தான் உடலின் இயக்கத்தில் பெரும் பங்கு வகிக்கிறது. ஆக்ஸிஜனை ஒவ்வொரு உறுப்பிற்கும் கொண்டு செல்வதற்கு இரத்த சிவப்பு அணுக்கள் உதவி செய்வதாக மருத்துவர் நித்யா தெரிவித்துள்ளார். இந்த இரத்த அணுக்களின் அளவு குறையும் போது தான் இரத்த சோகை ஏற்படுவதாக கூறப்படுகிறது.
அந்த வகையில் இரும்புச்சத்து போதுமான அளவு இருக்கும் போது தான் சிவப்பு அணுக்களின் உற்பத்தி சரியாக இருக்கும். இந்தியாவை பொறுத்த வரை 10-ல் 9 பெண்களுக்கு இரத்த சோகை இருப்பதாக மருத்துவர் நித்யா கூறுகிறார். ஆண்களுக்கு 14 முதல் 18 கிராம் வரை இரத்த சிவப்பு அணுக்கள் இருக்க வேண்டும். பெண்களுக்கு 13 முதல் 16 கிராம் வரை இது இருக்க வேண்டும். இந்த அளவு 9-க்கு குறைவாக இருந்தால் இரத்த சோகை எனக் கருதப்படும்.
அதன்படி, இரும்புச் சத்தை அதிகரிக்க கீரை வகைகள் பெரிதும் உதவுகின்றன. குறிப்பாக, வெந்தயக் கீரை மற்றும் முருங்கைக் கீரையில் இதன் சத்துகள் அதிகமாக இருக்கின்றன. இதற்காக முருங்கை கீரையில் இருந்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். காலை வெறும் வயிற்றில் இந்த சாறை சுமார் 60 மில்லி லிட்டர் அளவில் தேனில் கலந்து குடிக்க வேண்டும்.
Advertisment
Advertisement
இப்படி வாரத்திற்கு மூன்று முதல் நான்கு முறை குடித்து வந்தால் இரும்புச் சத்து அதிகரிக்கும் என மருத்துவர் நித்யா தெரிவித்துள்ளார்.
நன்றி - Doctor interview YouTube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.