கண்ணை சுற்றி வட்ட வட்டமாக கருவளையம்? இந்த வேரை மட்டும் இப்படி யூஸ் பண்ணுங்க போதும்: டாக்டர் நித்யா
வெட்டிவேரில் இருக்கும் பல்வேறு விதமான மருத்துவ குணங்கள் குறித்து மருத்துவர் நித்யா தெரிவித்துள்ளார். மேலும், இவற்றை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
வெட்டிவேரில் இருக்கும் பல்வேறு விதமான மருத்துவ குணங்கள் குறித்து மருத்துவர் நித்யா தெரிவித்துள்ளார். மேலும், இவற்றை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
வெட்டிவேர் ஒரு புல் வகையைச் சேர்ந்தது. இதில் பல்வேறு மருத்துவ குணங்கள் இருப்பதாக மருத்துவர் நித்யா தெரிவித்துள்ளார். வெட்டிவேரிலிருந்து எடுக்கப்படும் எசென்ஷியல் ஆயில், தலைமுடி முதல் பாதம் வரை உண்டாகும் நோய்களை குணப்படுத்த பயன்படுகிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Advertisment
வெட்டிவேரை இரவில் பசும் பாலில் ஊறவைத்து, காலையில் அதனை அரைத்து பின்னர் தைலமாக காய்ச்சி பயன்படுத்தலாம். இது பொடுகு, சொரியாசிஸ் மற்றும் முடி உதிர்வு போன்ற பிரச்சனைகளுக்கு உதவுகிறது. வெட்டிவேர் பொடியுடன் கோரைக்கிழங்கு, பூலாங்கிழங்கு மற்றும் கஸ்தூரி மஞ்சள் சேர்த்து ஃபேஸ் பேக்காக பயன்படுத்தலாம் எனவும் மருத்துவர் நித்யா தெரிவித்துள்ளார்.
இது சரும வறட்சி, கருவளையம் மற்றும் பருக்கள் போன்ற பிரச்சனைகளை சரிசெய்ய உதவுகிறது. வெட்டிவேர் ஃபேஸ் பேக்குடன் ரோஸ் வாட்டர் மற்றும் இரண்டு துளிகள் தேன் சேர்த்து பயன்படுத்தும்போது கரும்புள்ளிகள் குறையத் தொடங்கும்.
மேலும், சருமத்தில் ஏற்படும் கருமை நிற திட்டுகள் மற்றும் ஹைப்பர் பிக்மென்டேஷன் மறைய வெட்டிவேர் பொடி உதவுகிறது என்று மருத்துவர் நித்யா கூறுகிறார். குளியல் பொடியில் வெட்டிவேரை சேர்த்து பயன்படுத்தினால் சரும பிரச்சனைகள் குறையும்.
Advertisment
Advertisements
வெட்டிவேர், சோம்பு, கல்கண்டு மற்றும் அதிமதுரம் சேர்த்த பொடியை அரை ஸ்பூன் அளவில் எடுத்து பாலில் கலந்து காலை மற்றும் இரவில் குடித்தால் உடல் உஷ்ணம் குறையும் மற்றும் அல்சர் பிரச்சனை சரியாகும் என்று மருத்துவர் நித்யா தெரிவித்துள்ளார். இதேபோல், வெட்டிவேர், கடுக்காய் மற்றும் சோம்பு சேர்த்து கஷாயம் செய்து இரவில் குடித்தால் மலச்சிக்கல் குணமடையும்.
வெட்டிவேரை தேங்காய் எண்ணெயில் காய்ச்சி, அந்த எண்ணெயை கால் பாதங்களில் தடவினால் எரிச்சல் குணமாகும். வெட்டிவேர், நன்னாரி மற்றும் தேற்றான் கொட்டை சேர்த்து ஊறவைத்த நீரை குடித்தால் உடல் உஷ்ணம் குறையும் என மருத்துவர் நித்யா அறிவுறுத்துகிறார்.
நன்றி - Cosmo Health Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.