வெட்டிவேர் தைலம் இப்படி யூஸ் பண்ணுங்க… காது பிரச்சனைகளுக்கு சூப்பர் தீர்வு; டாக்டர் நித்யா
காது தொடர்பான பிரச்சனைகளுக்கு எளிமையான வீட்டு வைத்திய முறை மூலம் தீர்வு காண முடியும் என்று மருத்துவர் நித்யா தெரிவித்துள்ளார். அந்த தகவல்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
காது தொடர்பான பிரச்சனைகளுக்கு எளிமையான வீட்டு வைத்திய முறை மூலம் தீர்வு காண முடியும் என்று மருத்துவர் நித்யா தெரிவித்துள்ளார். அந்த தகவல்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
பொதுவாக காதில் ஏதாவது வலி அல்லது பிரச்சனை இருந்தால் நம்மால் சரியாக நடக்கக் கூட முடியாது என்று மருத்துவர் நித்யா தெரிவித்துள்ளார். இதேபோல், தலை சுற்றலும் ஏற்படக் கூடும் என்று அவர் கூறியுள்ளார். இவை கழுத்து மற்றும் தாடை பகுதிகளிலும் வலியை உருவாக்கும்.
Advertisment
ஆனால், இது போன்ற பிரச்சனை இருப்பவர்கள் மருத்துவரை ஆலோசிக்காமல் தாங்களாகவே மருந்து வாங்கி அதனை காதில் ஊற்றக் கூடாது என்று மருத்துவர் நித்யா எச்சரிக்கை விடுத்துள்ளார். அதற்கு பதிலாக மருந்துகளை வேறு விதமாக வேண்டுமானால் பயன்படுத்தலாம் என்று அவர் அறிவுறுத்துகிறார்.
இத்தகைய பிரச்சனைகளுக்கு வெட்டி வேர் தைலத்தை பயன்படுத்தலாம் என்று மருத்துவர் நித்யா தெரிவித்துள்ளார். உடலில் இருக்கும் அதிகப்படியான் உஷ்ணத்தை குறைக்கும் ஆற்றல் வெட்டி வேருக்கு இருக்கிறது. இதன் மூலம் உஷ்ணத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறைந்த மாற்றம் தெரிய வரும்.
இதற்காக, வெட்டி வேரை சிறிய துண்டுகளாக நறுக்கி, அவற்றை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். இவ்வாறு ஊற வைக்கும் தண்ணீரில் சிறிதளவு கருஞ்சீரகம், துளசி விதைகள், கிராம்பு, பட்டை மற்றும் இரண்டு ஜாதிக்காய் ஆகியவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
Advertisment
Advertisements
இவை நன்றாக ஊறியதும் மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளலாம். இப்போது, அரைத்து வைத்திருக்கும் இந்தப் பொடியை தேங்காய் எண்ணெய்யுடன் சேர்த்து காய்க்க வேண்டும். இது தைலம் பதத்திற்கு வந்ததும், வடிகட்டி எடுத்துக் கொள்ளலாம்.
இதனை தலை மற்றும் உடல் முழுவதும் தடவி விட்டு, சுடுதண்ணீரில் குளிக்க வேண்டும். இவ்வாறு செய்தால் காது தொடர்பான பிரச்சனைகள் குறையத் தொடங்கும் என்று மருத்துவர் நித்யா தெரிவித்துள்ளார்.
நன்றி - Mr Ladies Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.