நுரையீரலில் நாள்பட்ட சளிக்கு பெஸ்ட்; கருநொச்சி தைலத்தை சூடாக்கி..! டாக்டர் நித்யா அட்வைஸ்
நீண்ட நாட்களாக இருமல், சளி தொல்லையால் பாதிக்கப்பட்டவர்களுக்கான வீட்டு வைத்திய முறை குறித்து மருத்துவர் நித்யா தெரிவித்துள்ளார். இவை நோய்த் தொற்றில் இருந்து குணப்படுத்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பலருக்கு நுரையீரலில் நாள்பட்ட சளி தொல்லை இருக்கும். எத்தனையோ மருந்து, மாத்திரைகள் உட்கொண்டும் இதற்கு தீர்வு கிடைக்கவில்லை என அவதிப்படுபவர்கள் உண்டு. அவர்களுக்கு எளிமையான வீட்டு வைத்திய முறையை மருத்துவர் நித்யா தெரிவித்துள்ளார்.
Advertisment
கால நிலை மாறுபாடு காரணமாக மழை காலம் மற்றும் குளிர் காலங்களில் சளி தொல்லையால் அவதிப்படுபவர்களின் எண்ணிக்கை ஏராளம். இதனால் மூச்சு விடுவதில் சிரமம் இருக்கும். மேலும், பசியின்மை, செரிமான கோளாறு, தலை வலி, அடிக்கடி காய்ச்சல் போன்ற தொல்லைகள் இருக்கும் என மருத்துவர் நித்யா தெரிவித்துள்ளார்.
இதனைக் கட்டுப்படுத்துவதற்காக மருந்துகள் எடுத்துக் கொள்ளும் போது உடனடியாக தீர்வு கிடைப்பதை போன்று தோன்றலாம். ஆனால், அந்த கிருமிகள் முற்றிலும் அழியாமல் மீண்டும் இதே பிரச்சனைக்கு வழிவகுப்பதாக மருத்துவர் நித்யா கூறுகிறார்.
துளசி, கருநொச்சி, சுக்கு ஆகியவற்றை சேர்த்து பயன்படுத்தக் கூடிய தைலத்தை இது போன்ற பிரச்சனைகளுக்கு பயன்படுத்தலாம் என அவர் தெரிவித்துள்ளார். அதன்படி, இந்த கருநொச்சி தைலத்தை லேசாக சூடு படுத்தி அந்த வெப்பம் இருக்கும் போதே, நெஞ்சு பகுதி மற்றும் தலையில் தேய்க்கலாம். அதன் பின்னர் சுமார் 30 நிமிடங்கள் கழித்து சுடுதண்ணீரில் தலைக்கு குளித்து விடலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
Advertisment
Advertisement
இவ்வாறு கருநொச்சி தைலத்தை பயன்படுத்துவது சளி தொல்லைக்கு சிறந்த மருந்தாக செயல்படும் என மருத்துவர் நித்யா தெரிவித்துள்ளார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.