ஆணுறுப்பை பலப்படுத்தும்; வீரியத்தை அதிகரிக்கும் இந்த தைலம்... இப்படி யூஸ் பண்ணுங்க; டாக்டர் நித்யா டிப்ஸ்
ஆணுறுப்பை பலப்படுத்துவது எப்படி என்று மருத்துவர் நித்யா விளக்கம் அளித்துள்ளார். இதற்காக சில உணவு முறை மாற்றம் மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களை மேற்கொள்ளலாம் என்று அவர் அறிவுறுத்துகிறார்.
ஆணுறுப்பை பலப்படுத்துவது எப்படி என்று மருத்துவர் நித்யா விளக்கம் அளித்துள்ளார். இதற்காக சில உணவு முறை மாற்றம் மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களை மேற்கொள்ளலாம் என்று அவர் அறிவுறுத்துகிறார்.
ஆண்களின் விறைப்புத்தன்மை குறைபாடு தற்போது ஒரு முக்கியமான உடல்நலப் பிரச்சனையாக மாறி இருக்கிறது. இது இளம் வயதினரையும் பாதிக்கும் நிலை உருவாகி இருக்கிறது என்று மருத்துவர் நித்யா தெரிவித்துள்ளார். இது குறித்த தகவல்களை மிஸ்டர் லேடிஸ் யூடியூப் சேனலில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Advertisment
பயம், பதற்றம் மற்றும் தாழ்வு மனப்பான்மை போன்றவை திருமணத்திற்கு முன்பே விறைப்புத்தன்மை குறைபாட்டிற்கு வழிவகுக்கும். வயதாகும் போது செல்களின் சிதைவு விறைப்புத்தன்மையை குறைக்கிறது. உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, உயர் கொழுப்பு போன்ற நோய்கள் மற்றும் அவற்றுக்கான மருந்துகள் விறைப்புத்தன்மையை பாதிக்கலாம் என்று மருத்துவர் நித்யா கூறுகிறார்.
விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் உணவுகளை சாப்பிடுவது நல்ல பலன் அளிக்கும். குறிப்பாக, சிறிய வகை மீன்கள், சுறா, இறால் மற்றும் நண்டு போன்ற கால்சியம் மற்றும் புரதம் நிறைந்த உணவுகளை சாப்பிடலாம். நண்டு போன்ற உணவுகளில் அதிகமாக கால்சியம் மற்றும் தாமிரச் சத்து இருக்கிறது.
ஆணுறுப்பு தசைகளை தசைகளை வலுப்படுத்த தாமிரம் நிறைந்த மூலிகைகள் கொண்டு தயாரிக்கப்படும் தைலங்களை பயன்படுத்தலாம். கோபுரம் தாங்கி மூலிகை, அம்மான் பச்சரிசி, தும்பை, நெய் மற்றும் நல்லெண்ணெய் எண்ணெய் சேர்த்து தயாரிக்கப்பட்ட தைலத்தை கொண்டு ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு முறை மெலிதாக மசாஜ் செய்யலாம் என்று மருத்துவர் நித்யா அறிவுறுத்துகிறார்.
Advertisment
Advertisements
ஆரோக்கியமான எடையை பராமரிப்பது விறைப்புத்தன்மை பிரச்சனைகளைத் தடுக்க உதவும். மன அழுத்தத்தை நிர்வகித்தல், போதுமான தூக்கம் ஆகியவையும் ஆண்களின் விறைப்புத்தன்மையை பராமரிப்பதற்கு அவசியம். அஸ்வகந்தா நன்மை அளிக்கும் என்றாலும், இது விறைப்புத்தன்மை குறைபாட்டிற்கு முழுமையான தீர்வாக இருக்காது என்று மருத்துவர் நித்யா தெரிவித்துள்ளார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.