முடி உதிர்வு பிரச்சனையா? ஆவாரம் பூ பொடியை இப்படி யூஸ் பண்ணுங்க; டாக்டர் நித்யா அட்வைஸ்
முடி உதிர்வு பிரச்சனை இருப்பவர்கள் ஆவாரம் பூ பொடியை கொண்டு ஹேர்பேக் தயாரித்து பயன்படுத்தலாம் என்று மருத்துவ நித்யா தெரிவித்துள்ளார். இதனை எப்படி செய்வது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முடி உதிர்வு பிரச்சனை இருப்பவர்கள் ஆவாரம் பூ பொடியை கொண்டு ஹேர்பேக் தயாரித்து பயன்படுத்தலாம் என்று மருத்துவ நித்யா தெரிவித்துள்ளார். இதனை எப்படி செய்வது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய சூழலில் முடி உதிர்வு பிரச்சனை இல்லாதவர்களை தேடி கண்டுபிடிப்பது மிகவும் சிரமம். அந்த அளவிற்கு முடி உதிர்வு பிரச்சனையால் நிறைய பேர் பாதிக்கப்படுகின்றனர். ஆண் மற்றும் பெண் என பாலின பேதமின்றி பலரும் இந்த பிரச்சனையை எதிர் கொள்கின்றனர். குறிப்பாக இளம் பருவத்தினருக்கு இந்த பாதிப்பு அதிகமாக இருக்கிறது.
Advertisment
முடி உதிர்வுக்கு நிறைய காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. உதாரணத்திற்கு, உணவு முறை மாற்றம், வாழ்க்கை முறை மாற்றம், தூக்கமின்மை, பொடுகு தொல்லை என்று பல்வேறு காரணங்களால் முடி உதிர்வதாக வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
அந்த வகையில் ஒருவருக்கு முடி உதிர்வு பிரச்சனை இருந்தால் அதற்கான காரணத்தை கண்டறிந்து, அதனை சரி செய்வதன் மூலம் முடி உதிர்வை தடுக்க முடியும். சத்தான உணவு வகைகளை எடுத்துக் கொள்வது, சரியான நேரத்திற்கு தூங்குவது போன்ற மாற்றங்களை சீரமைத்தால் இந்தப் பிரச்சனை குறையும்.
சிலருக்கு உடலில் இருக்கும் அதீத உஷ்ணத்தின் காரணமாக முடி உதிர்வு பிரச்சனை இருக்கலாம். அப்படி இருப்பவர்கள் சில ஹேர்பேக் பயன்படுத்துவதன் மூலம் முடி உதிர்வு பிரச்சனையை குறைக்க முடியும் என்று மருத்துவர் நித்யா கூறுகிறார். இதற்காக ஒரு ஹேர்பேக் தயாரிக்கும் முறையை அவர் பரிந்துரைத்துள்ளார்.
Advertisment
Advertisements
இதற்காக ஆவாரம் பூ பொடியை நம் தலைமுடிக்கு தேவையான அளவு எடுத்துக் கொள்ள வேண்டும். இத்துடன் கற்றாழை ஜெல் மற்றும் தயிர் ஆகியவற்றை கலந்து பசை பதத்திற்கு மாற்றிக் கொள்ள வேண்டும். இப்படி செய்தால் நம் முடிக்கு தேவையான ஹோம்மேட் ஹேர்பேக் தயாராகி விடும்.
இந்த ஹேர்பேக்கை தலையில் தேய்த்து விட்டு சுமார் 20 நிமிடங்கள் கழித்து குளித்து விடலாம். இவ்வாறு செய்யும் போது உடல் உஷ்ணம் குறைவதுடன், பொடுகு பிரச்சனையும் நீங்கும் என்று மருத்துவர் நித்யா தெரிவித்துள்ளார். இது போன்று வீட்டிலேயே தயாரிக்கப்படும் ஹோம்மேட் ஹேர்பேக்கில் இரசாயனங்கள் சேர்க்காததால், அவற்றில் இருந்து ஒவ்வாமை அல்லது பக்கவிளைவுகள் ஏற்படும் வாய்ப்பும் கிடையாது.
நன்றி - Doctor Interview Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.