வேர்க்குரு அதிகம் வருதா? குளிக்கும் நீரில் இதை சேருங்க; டாக்டர் நித்யா
கோடை காலத்தில் உடலில் அதிகமாக வியர்த்து வியர்வை கொப்புளம் வருகிறதா? அப்போ குளிக்கும் நீரில் நாம் சேர்க்க வேண்டிய முக்கியமான ஒன்றை பற்றி டாக்டர் நித்யா கூறுகிறார்.
கோடை காலத்தில் உடலில் அதிகமாக வியர்த்து வியர்வை கொப்புளம் வருகிறதா? அப்போ குளிக்கும் நீரில் நாம் சேர்க்க வேண்டிய முக்கியமான ஒன்றை பற்றி டாக்டர் நித்யா கூறுகிறார்.
கோடைகாலம் ஆரம்பித்துவிட்டது. அவ்வளவுதான் வீட்டில் இருப்பவர்கள் வெளியில் செல்பவர்கள் என அனைவருக்கும் வியர்வை கொப்புளம் வர ஆரம்பித்துவிடும். என்னதான் பவுடர், மருந்து பூசினாலும் இந்த வியர்வை கொப்புளம் அடங்கவில்லை என்று கூறுபவர்களுக்கு டாக்டர் நித்யா தனது யூடியூப் பக்கத்தில் குறிப்பு ஒன்றை கூறுகிறார்.
Advertisment
உடலில் அதிகமான வியர்வையால் வரக்கூடிய வியர்வை கொப்புளம் கோடைகாலம் ஆரம்பித்த நாட்களில் வர ஆரம்பிக்கும். அதிகமாக வியர்பதாலயே இந்த மாதிரியான பிரச்சனைகள் ஏற்படுகிறது என்று டாக்டர் நித்யா கூறுகிறார்.
இதனால் உடலில் துர்நாற்றம் கூட விச ஆரம்பிக்கும். வியர்வை வெளிர் நிறத்தில் மஞ்சள் நிறத்தில் இருக்கிறது என்றும் கூறுவார்கள். அவர்களுக்கு பூஞ்சை தொற்று வரவும் வாய்ப்பு இருக்கும். இதனை சரி செய்ய வேண்டுமென்றால் தினமும் நாம் குளிக்க வேண்டிய நீரில் ஒரு சில விஷயங்களை சேர்த்துக் கொள்ளலாம்.
சிலருக்கு நிறைய வியர்வை கொப்புளம் வந்து எரிச்சல் உணர்வு இருக்கும். அதற்கு நாம் குளிக்க கூடிய நீரில் திரிபலா பொடி, வேப்பிலை பொடி, மஞ்சள், படிகார கல் ஆகியவற்றை சேர்த்து குளிக்கலாம்.
Advertisment
Advertisements
இந்தக் கலவைக்கு தேவையான அளவு பற்றி பார்ப்போம்.
திரிபலா பொடி 100 கிராம்
வேப்ப இலை பொடி 50 கிராம்
மஞ்சள் 50 கிராம்
படிகாரம் 20 கிராம் ஆகியவற்றை பொடியாக கலந்து ஒரு டப்பாவில் வைத்துக் கொண்டால் நீரில் அரை ஸ்பூன் அல்லது ஒரு ஸ்பூன் போட்டு குளிக்கலாம்.
குளிப்பதற்கு முன்னாடி கூட வியர்வை இருக்கும் இடங்களில் இதை ஒரு அரை ஸ்பூன் எடுத்து நீரில் கலந்து அந்த இடத்தில் பூசி விடலாம். இந்தக் கோடையில் இந்த வியர்வை கொப்புளம் சமாளிக்க இதனை பின்பற்றலாம் சிறிது சிறிதாக மாற்றம் ஏற்படும்.
அதுமட்டுமின்றி கோடையில் உடலை நீரேற்றமாக வைத்துக் கொள்ள வேண்டும். நீர்சத்து மிக்க காய்கறிகள் பழங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். கற்றாழை, பூசணி, பீர்க்கங்காய் சாறு ஆகியவற்றை எடுத்துக் கொள்ளலாம். தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளும் வராது.
அதிக வியர்வை ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். வெயில் வெளியே சென்று வந்தால் கழுத்து சுற்றி கருமை போன்ற பிரச்சனைகள் இருக்கிறது. உடல் டேன் ஆன மாதிரி இருக்கிறது போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.