கஸ்தூரி மஞ்சளுடன் இந்த பொருட்களை சேர்த்து யூஸ் பண்ணுங்க… முகம் பளபளக்கும்; டாக்டர் நித்யா
சருமத்தை எவ்வாறு இளமையாகவும், பொலிவாகவும் பராமரிக்க வேண்டும் என மருத்துவர் நித்யா தெரிவித்துள்ளார். மேலும், இந்த முறையை பின்பற்றினால் பக்க விளைவுகள் ஏற்படாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது பலரும் வயதுக்கு மீறிய தோற்றத்தில் காட்சியளிக்கின்றனர். இதற்கு மன அழுத்தம், மாசுபாடு, வாழ்க்கை முறை மாற்றம், உணவு முறை மாற்றம் மற்றும் சரியான சரும பராமரிப்பு இல்லாதது தான் காரணம் என மருத்துவர் நித்யா தெரிவித்துள்ளார்.
Advertisment
இதனை ஃபேஷியல் செய்து சீரமைத்து விடலாம் என்று பெரும்பாலானோர் நினைக்கின்றனர். ஆனால், அவற்றில் கலந்திருக்கும் இரசாயனங்கள் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும். எனவே, இயற்கையான முறையில் சருமத்தை பராமரிக்கலாம் என்று மருத்துவர் நித்யா அறிவுறுத்துகிறார்.
முக்கியமாக கஸ்தூரி மஞ்சளை பயன்படுத்தி ஃபேஸ்பேக் தயார் செய்து முகத்தை பொலிவாக மாற்ற முடியும். இத்துடன் பூலாங்கிழங்கு மற்றும் கோரைக் கிழங்கு ஆகியவற்றையும் சேர்த்து பயன்படுத்த வேண்டும்.
இவற்றை நாட்டு மருந்து கடைகளில் இருந்து வாங்கி வந்து வெயிலில் காய வைக்க வேண்டும். இவை நன்றாக காய்ந்ததும் பொடியாக அரைத்துக் கொள்ளலாம். இந்த பொடியை நம் முகத்திற்கு தேவையான அளவு எடுத்து பன்னீர் மற்றும் இரண்டு துளி எலுமிச்சை சாறு சேர்த்து பசை பதத்திற்கு மாற்றிக் கொள்ள வேண்டும்.
Advertisment
Advertisements
இவ்வாறு செய்தால் ஃபேஸ்பேக் தயாராகி விடும். இதை முகத்தில் தடவுவதற்கு முன்னதாக, முகத்தை கழுவிக் கொள்ள வேண்டும். அதன் பின்னர், இந்த பேக்கை முகத்தில் தடவலாம். இதையடுத்து சுமார் 30 நிமிடங்களுக்கு பின்னர் முகத்தை மீண்டும் கழுவி விடலாம்.
இதனை பயன்படுத்தும் போது வாரத்திற்கு இரண்டு முறை ஆவி பிடிக்கலாம். இந்த முறையை பின்பற்றும் போது நம் முகம் பொலிவாக மாறும் என்று மருத்துவர் நித்யா அறிவுறுத்துகிறார்.
நன்றி - Mr Ladies Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.