திருநங்கையுடன் உடலுறவு... உடம்புக்கு நல்லதல்ல ஏன்?: விளக்கம் டாக்டர் நிவேதிதா காமராஜ்

திருநங்கையுடன் உடலுறவு கொள்வது உடம்பிற்கு எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்று டாக்டர் நிவேதிதா காமராஜ் விளக்கமளித்துள்ளார்.

திருநங்கையுடன் உடலுறவு கொள்வது உடம்பிற்கு எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்று டாக்டர் நிவேதிதா காமராஜ் விளக்கமளித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
nivethitha

திருநங்கையுடன் உடலுறவு... உடம்புக்கு நல்லதல்ல ஏன்?: விளக்கம் டாக்டர் நிவேதிதா காமராஜ்

அறியாத நபர்களுடன் உடல் உறவு கொள்வதால் ஏற்படும் தீமைகள் குறித்து டாக்டர் நிவேதிதா காமராஜ் கருத்து தெரிவித்துள்ளார். அவர் பேசியதாவது, “அறியாத நபர்களுடன் பாலியல் உறவு கொள்வது மிகவும் ஆபத்தானது. திருநங்கைகள் என்று இல்லை யாராக இருந்தாலும் தெரியாதவர்களுடன் உடல் உறவு கொள்வது மிகவும் ஆரோக்கியமற்றது. 

Advertisment

இத்தகைய உறவுகள் பாலியல் மூலம் பரவும் நோய்த்தொற்றுகள் மற்றும் பிற உடல்நலக் கேடுகளுக்கு வழிவகுக்கும். உடல் உறவுக் கொள்ளும் நபரில் ஒருவருக்கு நோய் தொற்று இருந்தாலும் அது மற்றவருக்கு எப்படியாவது பரவி விடுகிறது. பெரும்பாலும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவு போன்றவற்றாலும் நோய்கள் பரவுகிறது. 

மேலும், ஆணுறைகள் 100 சதவிகிதம் பாதுகாப்பு அளிப்பதில்லை. அவற்றின் தோல்வி விகிதம் 4 சதவிகிதம் முதல் 14 சதவிகிதம் வரை இருக்கலாம். நிறைய நேரங்களில் பெண்களின் பிறப்புறுப்பு பகுதியில் அரிப்பு, வேறு நிறத்தில் வெள்ளைப்படுதல் போன்ற அறிகுறிகள் இருக்கலாம். இதன் மூலம் நம் பிறப்புறுப்பு பாதிக்கப்பட்டிருப்பதை அறிந்து கொள்ளலாம். 

சிலருக்கு வெளிப்பாடுகள் இல்லாமல் நோய் தாக்குதல் இருக்கும். ஆண்களுக்கு அவர்களது பிறப்புறுப்பில் சிறு சிறு கட்டிகள் அல்லது வலிகள் இருக்கலாம். இதன் மூலம் நோய் தாக்குதலுக்கு உள்ளானதை அறிந்து கொள்ளலாம். பாலியல் வாழ்க்கையில் வெளிப்படையான தகவல்தொடர்பு மிக அவசியம்.  

Advertisment
Advertisements

குறிப்பாக, பெண்கள் தங்கள் விருப்பங்களை வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும். இரு பாலினத்தவரும் ஒருவருக்கொருவர் விருப்பங்களைப் புரிந்துகொள்வது நிறைவான மற்றும் சுவாரஸ்யமான பாலியல் வாழ்க்கைக்கு வழிவகுக்கும்.

தம்பதிகள் தங்கள் பாலியல் உறவை மேம்படுத்த பல்வேறு புதிய நிலைகளை முயற்சி செய்யலாம். மேலும் உடலுக்கு பாதுகாப்பான பாலியல் விளையாட்டுப் பொருட்கள் மற்றும் வைப்ரேட்டர்களைப் பயன்படுத்தலாம். 

பெண்களுக்கு உச்சக்கட்டத்தை அடைய அதிக நேரம் எடுக்கும் என்பதால் ஃபோர்பிளே முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. மேலும்,  வைப்ரேட்டர்கள் பெண்களுக்கான உச்சக்கட்ட நேரத்தைக் குறைக்க வழிவகுக்கிறது. பாலியல் உறவின்போது வலி அல்லது அசௌகரியம் ஏற்பட்டால், மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.

அதை தவிர்த்து தேங்காய் எண்ணெய் அல்லது ஆமணக்கு எண்ணெய் போன்றவற்றை லூப்ரிகண்டுகளாகப் பயன்படுத்துவது மிகவும் தவறான செயல். மருத்துவரின் ஆலோசனைகளை கேட்டு நீர் சர்ந்த லூப்ரிகண்டுகளை பயன்படுத்தலாம்” என்றார்.

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.

lifesty

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: