சூரியன் மறைவுக்குப் பிறகு சாப்பிடும் குலோப் ஜாமுன் ஆபத்து; தொப்பையை குறைக்க இதை மட்டும் பண்ணுங்க: டாக்டர் பால்
தொப்பையை குறைப்பதற்கு மருத்துவர் பால் பல்வேறு வழிமுறைகளை அறிவுறுத்தியுள்ளார். அவற்றை எவ்வாறு பின்பற்ற வேண்டும் என தற்போது பார்க்கலாம். மேலும், தொப்பையின் பாதிப்புகள் குறித்தும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போதைய சூழலில் நிலவி வரும் வாழ்க்கை முறை மற்றும் உணவு முறை மாற்றத்தால் பலரும் தொப்பையால் அவதிப்பட்டு வருகின்றனர். தொப்பையின் வீரியத்தை கண்டறியும் முறையை மருத்துவர் பால் தெரிவித்துள்ளார். அதன்படி, காலை எழுந்ததும் நம் வயிற்றை சுற்றி இன்ச் டேப் கொண்டு அளவு எடுத்து அதனை குறித்துக் கொள்ள வேண்டும். அந்த வகையில் ஆண்களுக்கு 90 செ.மீ-க்கு மேல் இருந்தாலோ அல்லது பெண்களுக்கு 80 செ.மீ-க்கு மேல் இருந்தாலோ அவர்களுக்கு தொப்பை இருக்கிறது என கண்டறிந்து விடலாம்.
Advertisment
இவ்வாறு தொப்பை இருந்தால் சர்க்கரை நோய், பக்கவாதம், மாரடைப்பு ஏற்படுவதற்கு வாய்ப்பு இருக்கிறது என அவர் தெரிவித்துள்ளார். தற்போது இளம் வயதில் மாரடைப்பு ஏற்படுவதற்கான முக்கிய காரணமே தொப்பையாக தான் இருக்கிறது. இத்தனை பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் தொப்பையை குறைக்க, மருத்துவர் பால் சில வழிமுறைகளை பரிந்துரைத்துள்ளார்.
தொப்பை உருவாவதற்கு இரண்டு காரணங்கள் இருப்பதாக மருத்துவர் பால் குறிப்பிடுகிறார். அதாவது நமக்கு தேவையான அளவிற்கு அதிகமாக சாப்பிட்டால் தொப்பை வரும் என அவர் தெரிவித்துள்ளார். மேலும், தவறான நேரத்தில் உணவுகளை உட்கொண்டாலும் தொப்பை உருவாகும் என்றும் அவர் கூறியுள்ளார். நம் உடலில் இன்சுலின் ஹார்மோன் காலை சூரியன் இருக்கும் நேரத்தில் சுறுசுறுப்பாக இயங்கும் என மருத்துவர் பால் தெரிவித்துள்ளார். இதேபோல், க்ரோத் ஹார்மோன் இரவு நேரத்தில் இயங்கக் கூடியது.
அதற்கு ஏற்றார் போல் நம் உணவு முறையை சீரமைத்துக் கொள்ள வேண்டும். கார்போஹைட்ரேட் உணவுகளை சாப்பிடும் போது, இன்சுலின் ஹார்மோன்கள் சுரந்து சர்க்கரை அளவை சீராக்கும். ஆனால், சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு சுரக்கும் இன்சுலினில் 50 சதவீதம் தான் தரம் இருக்கும் என்று மருத்துவர் பால் கூறுகிறார். எனவே, குலோப் ஜாமுன் போன்ற உணவு வகைகளை சூரிய அஸ்தமனத்திற்கு பின்னர் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
Advertisment
Advertisement
அதன்படி, காலை 10 மணி முதல் மாலை 6 மணிக்குள்ளாக அன்றைய உணவுகளை முற்றிலும் நாம் சாப்பிட்டு முடித்து விட வேண்டும். இப்படி செய்தால் தொப்பை வரும் வாய்ப்புகள் குறைவு என மருத்துவர் பால் தெரிவித்துள்ளார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.