தொடர்ந்து தேங்காய் எண்ணெய் பயன்படுத்துபவரா நீங்கள்? உங்களுக்கு ஒரு குட் நியூஸ்; டாக்டர் பிரபாகரன்
தொடர்ந்து தேங்காய் எண்ணெய் தேய்த்தால் தலை முடிக்கு என்ன ஆகும் என்பதை அறிவியல்பூர்வமான விளக்கங்களுடன் மருத்துவர் பிரபாகரன் தெரிவித்துள்ளார். அதனை இந்தக் குறிப்பில் பார்க்கலாம்.
இன்றைய சூழலில் முடி உதிர்வு பிரச்சனை இல்லாதவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அவ்வளவு பேர் முடி உதிர்வால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். உணவு முறை மாற்றம், வாழ்க்கை முறை மாற்றம், நாம் பார்க்கும் பணியின் சூழல், தூக்கமின்மை மற்றும் மன அழுத்தம் என பல காரணங்கள் இதற்காக கூறப்படுகிறது.
Advertisment
முடி உதிர்வு பிரச்சனை மக்களிடையே அதிகரித்திருக்கும் நிலையில், அதற்கான தீர்வு அளிப்பதாக கூறி விற்பனை செய்யப்படும் ஷாம்புக்கள், ஹேர் சீரம் போன்றவற்றின் எண்ணிக்கையும் அதிகரித்துக் வருகிறது. ஆனால், இவை அனைத்தும் சரியான பலன் அளிக்கிறதா என்பது கேள்விக் குறியாக இருக்கிறது. முன்னர் இருந்த காலத்தில் தினசரி தலைக்கு தேங்காய் எண்ணெய் தேய்த்ததால் முடி உதிர்வு பிரச்சனை ஏற்படாது என சிலர் கூறுகிறார்கள்.
ஆனால், தற்போதைய நிலவரப்படி எண்ணெய் தேய்ப்பதால் தான் முடி கொட்டுகிறது என ஒரு தரப்பினர் வாதிடுகின்றனர். இதில் எந்தக் கருத்து உண்மை என மருத்துவர் பிரபாகரன் அறிவியல்பூர்வமான விளக்கத்தை அளித்துள்ளார். அதன்படி, தினசரி தேங்காய் எண்ணெய் தேய்ப்பதால் என்ன ஆகும் என்று அவர் விவரித்துள்ளார்.
சமீபத்தில் நடத்திய ஒரு ஆராய்ச்சியில், 4 மாதங்கள் தொடர்ச்சியாக தேங்காய் எண்ணெய் பயன்படுத்தியவர்களின் தலையில் மைக்ரோஸ்கோப் கொண்டு ஆய்வு செய்ததாக மருத்துவர் பிரபாகரன் கூறியுள்ளார். அவர்களின் தலையில் க்யுடிபேக்டீரியம் அக்னீஸ், மலசீஸியா க்ளோபோசா போன்ற கிறுமிகள் அதிகமாக வளர்ந்திருப்பது கண்டறியப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
Advertisment
Advertisements
ஆனால், இந்தக் கிறுமிகள் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது இல்லை என மருத்துவர் பிரபாகரன் தெரிவித்துள்ளார். இவை முடி வளர்ச்சிக்கு தேவையான பையோட்டின் போன்ற வைட்டமின்கள் மற்றும் அமினோ ஆசிட்ஸ்களையும் உற்பத்தி செய்துள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது மட்டுமின்றி பொடுகு உருவாவதற்கு காரணமாக இருக்கும் கெட்ட ஃபங்கஸ்களை வளர விடாமல் தடுத்துள்ளன.
எனவே, தொடர்ச்சியாக தேங்காய் எண்ணெய் பயன்படுத்தி வந்தால் தலையில் பொடுகு தொல்லையும் குறையும், முடிக்கு தேவையான ஊட்டச்சத்துகளும் கிடைக்கும் என்று மருத்துவர் பிரபாகரன் அறிவுறுத்துகிறார்.
நன்றி - Dr.Prabhakar - HT Surgeon Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.