/indian-express-tamil/media/media_files/2025/02/26/LEJJkZeHj6MWBAB1UvZ8.jpg)
சர்க்கரை நோயாளிகளுக்கு உணவுக் கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சி எந்த அளவிற்கு முக்கியமோ, அதே அளவிற்கு சுகர் பரிசோதனையும் முக்கியம். உடலில் சர்க்கரையின் அளவு எவ்வளவு இருக்கிறது என்பதை அறிந்து தான் அதற்கான சிகிச்சையை முறையாக எடுத்துக் கொள்ள முடியும். அதன்படி, சர்க்கரை பரிசோதனைகள் குறித்து மருத்துவர் சண்முகசுந்தரம் பல்வேறு தகவல்களை வழங்கியுள்ளார்.
சர்க்கரை நோயாளிகள் பெரும்பாலும் காலை நேரத்தில் உணவுக்கு பின்னர் சுகரின் அளவை பரிசோதித்துக் கொள்வார்கள். ஆனால், இது மட்டுமே சர்க்கரையின் அளவை சரியாக பரிசோதிப்பதற்கு போதுமானதாக இருக்காது என மருத்துவர் சண்முகசுந்தரம் அறிவுறுத்துகிறார்.
அந்த வகையில் அனைத்து சர்க்கரை நோயாளிகளும் HbA1C என்ற இரத்த பரிசோதனையை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும் என மருத்துவர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார். இந்த பரிசோதனையின் மூலம் மூன்று மாத சர்க்கரை சராசரி அளவை கண்டறிய முடியும்.
ஒவ்வொரு சர்க்கரை நோயாளிகளும் இதன் அளவை நிச்சயம் தெரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில், ஒரு சிலருக்கு மதிய நேரத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக காணப்படும். இன்னும் சிலருக்கு மாலை அல்லது இரவு நேரத்தில் கூட சர்க்கரை அளவு அதிகரிப்பதற்கு வாய்ப்புள்ளது என்று மருத்துவர் சண்முகசுந்தரம் கூறுகிறார்.
இவை அனைத்தையும் தெரிந்து கொள்வதற்காக தான் HbA1C பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இதன் மூலமாக மருந்துகளின் அளவை சரியான விகிதத்தில் மருத்துவர்கள் வழங்குவதற்கு வசதியாக இருக்கும். எனவே, ஆண்டுக்கு மூன்று அல்லது நான்கு முறை HbA1C பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என மருத்துவர் சண்முகசுந்தரம் பரிந்துரைக்கிறார்.
நன்றி - Kauvery Hospital Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.