பாம்பு கடித்தால் இத மட்டும் கண்டிப்பா பண்ணாதீங்க... உயிருக்கு ஆபத்து: விளக்கும் டாக்டர் சரண்யா
ஒரு நபரை பாம்பு கடித்தால் என்னவெல்லாம் செய்ய வேண்டும், எவற்றை எல்லாம் செய்யக் கூடாது என்று மருத்துவர் சரண்யா விளக்கம் அளித்துள்ளார். அதனை இந்தக் குறிப்பில் காணலாம்.
ஒரு நபரை பாம்பு கடித்தால் என்னவெல்லாம் செய்ய வேண்டும், எவற்றை எல்லாம் செய்யக் கூடாது என்று மருத்துவர் சரண்யா விளக்கம் அளித்துள்ளார். அதனை இந்தக் குறிப்பில் காணலாம்.
உலகத்தில் ஏராளமான பாம்பு வகைகள் இருக்கின்றன. ஆனால், இவற்றில் சில வகையான பாம்புகள் மட்டும் தான் கொடிய விஷம் கொண்ட பாம்புகளாக அறியப்படுகிறது. அதனடிப்படையில், ஒரு நபரை பாம்பு கடித்தால் என்னவெல்லாம் செய்ய வேண்டும், எவற்றை எல்லாம் செய்யக் கூடாது என்று மருத்துவர் சரண்யா விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பான தகவல்களை காவேரி ஹாஸ்பிட்டல் யூடியூப் சேனலில் அவர் தெரிவித்துள்ளார்.
Advertisment
பெரும்பாலும், வீட்டில் இருக்கும் தோட்டம், வயல் வரப்புகள், மலைப்பகுதிகள், காடுகள் ஆகிய இடங்களில் பாம்பு கடிப்பதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கும் என்று மருத்துவர் சரண்யா தெரிவித்துள்ளார். அப்படி பாம்பு கடிக்கும் போது உடனடியாக பதற்றம் ஏற்படும். ஆனால், பாம்பு கடி ஏற்பட்டால் பதற்றம் அடையக் கூடாது என்று அவர் அறிவுறுத்துகிறார்.
ஏனெனில், இந்தியாவில் இருக்கும் 90 சதவீத பாம்புகளுக்கு விஷத் தன்மை இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார். சில வகையான பாம்புகள் கடிக்கும் போது நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு மூச்சு விடுவதற்கு சிரமமாக இருக்கும். மேலும், இரத்தம் உறைதலும் பாதிக்கப்படக் கூடும். பாம்பு கடித்த இடத்தில் கிறுமி தொற்று ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது.
பாம்பு கடியால் பாதிக்கப்பட்ட நபருக்கு, அன்டி ஸ்னேக் வெனோம் என்ற தடுப்பு மருந்து கொடுக்கப்படுகிறது. இதனை பெரும்பாலான அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இருந்து பெறலாம். பாம்பு எந்த இடத்தில் கடித்ததோ, அதைச் சுற்றி துணி கொண்டு கட்டுவதற்கு முயற்சி செய்வோம். விஷம் பரவாமல் இருப்பதற்கு இவ்வாறு செய்யப்படுகிறது. ஆனால், இவ்வாறு செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று மருத்துவர் சரண்யா தெரிவித்துள்ளார்.
Advertisment
Advertisements
இதேபோல், பாம்பு கடித்த இடத்தை கூர்மையான பொருள்கள் கொண்டு வெட்டி இரத்தத்தை வெளியேற்ற முயற்சி செய்வார்கள். இவ்வாறு செய்தால், தொற்று அதிகரிப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று எச்சரித்துள்ள மருத்துவர் சரண்யா, அப்படி செய்யக் கூடாது என்று தெரிவித்துள்ளார்.
எனவே, பாம்பு கடி ஏற்பட்டால் பதற்றப்படாமல் உடனடியாக அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு பாதிக்கப்பட்ட நபரை அழைத்துச் செல்ல வேண்டும். அங்கு முறையான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர், மருத்துவர்கள் சிகிச்சையை தொடங்குவார்கள். அந்த வகையில் கடித்த பாம்பை தேடிப் பிடிப்பதில் நேரத்தை வீணாக்காமல், பாதிக்கப்பட்ட நபரை மருத்துவமனைக்கு அழைத்து வர வேண்டும் என்று மருத்துவர் சரண்யா அறிவுறுத்துகிறார்.
நன்றி - Kauvery Hospital Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.