சிறந்த தாம்பத்திய உறவுக்கு இந்த 5 டிப்ஸ்: சொல்லும் டாக்டர் செங்கோட்டையன்
தாம்பத்திய உறவை சிறப்பாக அமைத்துக் கொள்ள மருத்துவர் செங்கோட்டையன் சில டிப்ஸ்களை வழங்கியுள்ளார். இதனை பின்பற்றுவதன் மூலம் அதிக நேரம் தாம்பத்திய உறவு கொள்ளலாம் என்று அவர் அறிவுறுத்துகிறார்.
கணவன், மனைவி இடையே சரியான தாம்பத்திய உறவு இல்லாததும் தற்போது விவாகரத்து அதிகரிப்பதற்கான காரணம் என மருத்துவர் செங்கோட்டையன் கூறுகிறார். தாம்பத்தியம் குறித்த புரிதல் இல்லாதது கணவன் மற்றும் மனைவி உறவு இடையே பிரச்சனையை ஏற்படுத்துகிறது. அந்த வகையில் தாம்பத்திய உறவு நேரத்தை அதிகரிக்க மருத்துவர் செங்கோட்டையன் சில டிப்ஸ்களை வழங்கியுள்ளார்.
Advertisment
தாம்பத்திய நேரம் அல்லது உடலுறவு நேரம் என்பது ஒவ்வொரு நபருக்கும் வேறுபடும் என்று மருத்துவர் செங்கோட்டையன் குறிப்பிடுகிறார். ஆணுறுப்பும், பெண்ணுறுப்பும் ஒரு முறை இணைவதை ஒரு ஸ்ட்ரோக் எனக் கூறுவார்கள் அந்த வகையில், ஒரு இந்திய ஆண் சராசரியாக 40 முதல் 60 ஸ்ட்ரோக்ஸ் உறவின் போது மேற்கொண்டால், அவர் ஆரோக்கியமாக இருக்கிறார் என்று அர்த்தம். இந்த எண்ணிக்கை 40-க்கு மிகக் குறைவாக இருந்தால் விரைவாக விந்து வெளியேறும் பிரச்சனை இருப்பதாக அர்த்தம் என்று மருத்துவர் செங்கோட்டையன் கூறுகிறார்.
முதல் கட்டமாக தாம்பத்திய உறவு தொடர்பான அறிவியல்பூர்வ தகவல்களை தெரிந்திருக்க வேண்டியது அவசியம். எனவே, உண்மைக்கு புறம்பான தகவல்களை நம்பி தாம்பத்திய உறவில் ஈடுபடுவது அதிருப்தியை அளிக்கும். அடுத்ததாக, ஆண் மற்றும் பெண் இருவரும் ஒரே நேரத்தில் உச்சம் அடைந்தால் அது 100 சதவீதம் சரியான உடலுறவாக இருக்கக் கூடும். அதற்காக, உடலுறவுக்கு முன்பாக முன்கலவியில் ஈடுபாட்டுடன் இருக்க வேண்டும்.
உடலுறவுக்கு முன்பாக சுமார் 15 முதல் 30 நிமிடங்களாவது முன்கலவியில் ஈடுபட வேண்டும். ஆண்களுக்கு பாலியல் ஈடுபாடு இயற்கையாகவே இருக்கும். ஆனால், பெண்களுக்கு அதிகப்படியான தூண்டுதல் தேவைப்படும் என்று மருத்துவர் செங்கோட்டையன் கூறுகிறார். வயிறு மற்றும் கால் பகுதிக்கு தேவையான உடற்பயிற்சிகளை ஆண்கள் அவசியம் செய்ய வேண்டும். இதுவும் நீண்ட நேர தாம்பத்தியத்திற்கு உதவி செய்யும்.
Advertisment
Advertisements
இவை அனைத்திற்கும் மேலாக உணவு முறையும் இதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அதனடிப்படையில், வாரத்திற்கு இரண்டு முறை உளுந்தங்கஞ்சி, உளுந்தங்கழி, பாதாம், காய்ந்த பேரீச்சம்பழம், ஊற வைத்து வேக வைத்த கொண்டை கடலை, முளைகட்டிய பயிறு வகைகள் மற்றும் தினசரி 4 அத்திப்பழங்கள் சாப்பிடலாம். இவை அனைத்தையும் சாப்பிட்டால் அதிக நேர தாம்பத்தியத்தில் ஈடுபட உதவும். இதேபோல், தேவையான அளவு தண்ணீர் குடித்து, நீர்ச்சத்து மிகுந்த காய்கறிகளையும் எடுத்துக் கொள்ளலாம்.
எனினும், இந்தப் பிரச்சனை தீவிரமாக இருந்தால் கட்டாயம் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது என்று மருத்துவர் செங்கோட்டையன் பரிந்துரைக்கிறார்.
நன்றி - DrSJ HotTv Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.