சம்மர் சீசனை சமாளிக்க இந்த டிப்ஸை மட்டும் ஃபாலோ பண்ணுங்க; டாக்டர் ஷர்மிகா அட்வைஸ்
கோடை காலத்தில் சருமம் தொடர்பான பாதிப்புகளில் இருந்து நம்மை பாதுகாப்பதற்கான சில வழிமுறைகளை மருத்துவர் ஷர்மிகா பரிந்துரைத்துள்ளார். இவற்றை பின்பற்றினால் வியர்க்குரு உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படாது என்று அவர் கூறியுள்ளார்.
கோடை காலத்தில் சருமம் தொடர்பான பாதிப்புகளில் இருந்து நம்மை பாதுகாப்பதற்கான சில வழிமுறைகளை மருத்துவர் ஷர்மிகா பரிந்துரைத்துள்ளார். இவற்றை பின்பற்றினால் வியர்க்குரு உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படாது என்று அவர் கூறியுள்ளார்.
கோடை வெயிலின் தாக்கம் தற்போது தீவிரமாக இருக்கிறது. இந்த வெயில் காலத்தை சமாளிப்பதற்கே மிகவும் சிரமமாக இருப்பதாக பலரும் கூறுகின்றனர். இதன் காரணமாக பள்ளி குழந்தைகளுக்கு சீக்கிரமாகவே கோடை விடுமுறை அளிக்கும் நடவடிக்கையை அரசு மேற்கொள்கிறது.
Advertisment
குறிப்பாக, வியர்க்குரு உள்ளிட்ட சருமம் தொடர்பான பாதிப்புகள் இந்த வெயில் காலத்தில் அதிகமாக பரவும். இவற்றை தடுப்பதற்கான சில வாழ்வியல் வழிமுறைகளை மருத்துவர் ஷர்மிகா பகிர்ந்து கொண்டார். இதன் மூலம் நம் சருமத்தை பாதுகாப்பாக வைத்திருக்க முடியும் என்று அவர் கூறுகிறார்.
இந்த வெயில் காலம் முடியும் வரை அதிக காரம் நிறைந்த உணவுகள் சாப்பிடுவதை குறைத்துக் கொள்ள வேண்டும் என மருத்துவர் ஷர்மிகா அறிவுறுத்துகிறார். குளிர்ச்சி தரக் கூடிய காய்கறிகள் மற்றும் பழங்கள் ஆகியவற்றை எடுத்துக் கொள்வதன் மூலம் உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்ள முடியும்.
மேலும், ஒரு நாளைக்கு இரண்டு முறை கட்டாயம் குளிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். இது தவிர வியர்க்குரு பிரச்சனைகளுக்கு பௌடர் பயன்படுத்தக் கூடாது என்று அவர் அறிவுறுத்துகிறார். அதற்கு பதிலாக குளித்து முடித்த பின்னர் சுமார் 5 அல்லது 6 துளிகள் தேங்காய் எண்ணெய்யை உடலில் தேய்த்து கொள்ளலாம் என்றும், இது வியர்க்குருவால் ஏற்படும் அரிப்பை தடுக்க உதவுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Advertisment
Advertisements
அதிகமாக வெளியே சென்று வேலை பார்ப்பவர்களும், ஏ.சி அறையை பயன்படுத்தாதவர்களும் காட்டன் துணிகளை அணிந்து கொள்ளலாம். மேலும், கோடை காலம் முழுவதும் கருப்பு நிறத்தில் ஆடை அணிவதை தவிர்க்க வேண்டும். பெர்ஃப்யூம் பயன்படுத்துவதால் சருமத்தில் பிரச்சனை ஏற்படுவதாக கருதுபவர்கள் ஜவ்வாது உபயோகிக்கலாம்.
இது தவிர குளிக்கும் தண்ணீரில் வேப்பிலை, வெற்றிலை, கற்றாழை, துளசி அல்லது கொத்தமல்லி ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை போடலாம். இதில் எது நமக்கு அதிக பலன் அளிக்கிறதோ அதனை தினசரி பயன்படுத்தலாம் என்று மருத்துவர் ஷர்மிகா குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்மர் சீசன் முழுவதும் இவை அனைத்தையும் பின்பற்றினால் சருமம் தொடர்பான பாதிப்புகளை கட்டுப்படுத்தலாம் என்று மருத்துவர் ஷர்மிகா பரிந்துரைக்கிறார்.
நன்றி - DAISY HOSPITAL Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.