குழந்தைகளிடம் இரவு 8 மணிக்கு மேல் இதை கொடுக்காதீங்க - டாக்டர் ஷர்மிகா அட்வைஸ்

குழந்தைகளிடம் இரவு 8 மணிக்கு மேல் செல்போன் கொடுப்பதை தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர் ஷர்மிகா அறிவுறுத்துகிறார். அதிக செல்போன் பயன்பாடு குழந்தைகளின் உடல் நலன் மற்றும் மனநலனை பாதிக்கும் என்று அவர் குறிப்பிடுகிறார்.

குழந்தைகளிடம் இரவு 8 மணிக்கு மேல் செல்போன் கொடுப்பதை தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர் ஷர்மிகா அறிவுறுத்துகிறார். அதிக செல்போன் பயன்பாடு குழந்தைகளின் உடல் நலன் மற்றும் மனநலனை பாதிக்கும் என்று அவர் குறிப்பிடுகிறார்.

author-image
WebDesk
New Update
Children

அன்றாடம் வளர்ச்சி அடையும் தொழில்நுட்பத்தின் வாயிலாக இன்றைய குழந்தைகள் கூட நவீன கருவிகளை பயன்படுத்தும் திறன்களை பெற்றுள்ளனர். குறிப்பாக செல்போன், கணினி போன்றவற்றை பெரியவர்களை விட குழந்தைகள் எளிதாக பயன்படுத்துகின்றனர்.

Advertisment

அதிலும் கொரோனா நோய்த் தொற்று பரவலின் போது ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்ட பின்னர், குழந்தைகளிடம் ஸ்மார்ட்போன் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதன் தாக்கம் இன்றும் கூட நிறைய வகுப்புகளை ஆன்லைன் வாயிலாக கற்கும் நிலைக்கு சென்றுள்ளது.

அதே சூழலில் அதிகப்படியான செல்போன் பயன்பாடு குழந்தைகளை பாதிக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. தேவைப்படும் போது மட்டுமே குழந்தைகளை செல்போன் பயன்படுத்த அனுமதிக்க வேண்டியது பெற்றோரின் கடமை. அந்த வகையில் இரவு 8 மணிக்கு மேல் குழந்தைகளிடம் செல்போன் கொடுப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர் ஷர்மிகா அறிவுறுத்துகிறார்.

இதுபோன்ற விதிமுறைகளை விதிப்பது முதலில் கடினமாக தான் தோன்றும். ஆனால், குழந்தைகளை இதற்கு பழக்கப்படுத்த வேண்டியது பெற்றோரின் கடமை என்று மருத்துவர் ஷர்மிகா கூறுகிறார். அதீத செல்போன் பயன்பாடு குழந்தைகளின் கல்வி, ஆரோக்கியம், நினைவாற்றல் மற்றும் கற்பனை திறன் போன்றவற்றை பாதிக்கும் என்று அவர் எச்சரிக்கை விடுக்கிறார்.

Advertisment
Advertisements

எனவே, குழந்தைகளின் வளமான எதிர்காலத்திற்காக இப்போதே சில மாற்றங்களை செய்ய வேண்டும் என்று பெற்றோருக்கு அவர் வலியுறுத்துகிறார். இதற்கு பழக குழந்தைகளுக்கு முதலில் சிரமமாக இருக்கும். ஆனால், குழந்தைகளின் மனதை வேறு விஷயங்களில் ஈடுபடுத்துவதன் மூலம் இதனை எளிமையாக்க முடியும் என்று மருத்துவர் ஷர்மிகா தெரிவித்துள்ளார்.

நன்றி - DAISY HOSPITAL Youtube Channel

 

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.

Smartphone

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: