இனிமே டீ, காபியை இப்படி குடிங்க; டாக்டர் ஷர்மிகா டிப்ஸ்
டீ, காபி குடிப்பவர்கள் பின்பற்ற வேண்டிய சில வழிமுறைகளை மருத்துவர் ஷர்மிகா தெரிவித்துள்ளார். இதனை பின்பற்றுவதன் மூலம் ஆரோக்கியத்திற்கு பாதிப்பு ஏற்படாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
டீ, காபி குடிப்பவர்கள் பின்பற்ற வேண்டிய சில வழிமுறைகளை மருத்துவர் ஷர்மிகா தெரிவித்துள்ளார். இதனை பின்பற்றுவதன் மூலம் ஆரோக்கியத்திற்கு பாதிப்பு ஏற்படாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
டீ அல்லது காபி குடிப்பது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்று வல்லுநர்கள் தொடர்ச்சியாக கூறுகின்றனர். ஆனால், புத்துணர்ச்சியாக உணருவதற்கு டீ, காபி குடிக்க வேண்டிய கட்டாயம் இருப்பதாக பலர் கூறுகின்றனர்.
Advertisment
அந்த வகையில் ஆரோக்கியமான முறையில் எவ்வாறு டீ, காபி குடிக்கலாம் என்று மருத்துவர் ஷர்மிகா தெரிவித்துள்ளார். இதனை பின்பற்றுவதன் மூலம் ஆரோக்கியத்திற்கு பாதிப்பு ஏற்படாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பான தகவல்களை டெய்ஸி ஹாஸ்பிட்டல் யூடியூப் சேனலில் அவர் தெரிவித்துள்ளார்.
அதன்படி, நாள் ஒன்றுக்கு ஒரு முறை மட்டுமே டீ அல்லது காபியை குடிக்கலாம் என்று அவர் அறிவுறுத்துகிறார். ஏனெனில், அளவுக்கு மீறி அவற்றை எடுத்துக் கொள்ளும் போது பாதிப்பு ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகமாக இருக்கின்றன.
மேலும், காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் பெட் காபி அல்லது பெட் டீ குடிக்கும் பழக்கம் இருந்தால், அதனை முற்றிலும் தவிர்த்து விட வேண்டும் என்று மருத்துவர் ஷர்மிகா கூறுகிறார். குறிப்பாக, ஒரு நாள் கூட இவ்வாறு குடிக்க வேண்டாம் என்று அவர் எச்சரிக்கை விடுக்கிறார்.
Advertisment
Advertisements
பசி எடுத்தால் டீ குடிக்கும் பழக்கத்தை சிலர் கடைபிடிப்பார்கள் அவ்வாறு செய்ய வேண்டாம் என்று மருத்துவர் ஷர்மிகா கூறுகிறார். ஏனெனில், இது வயிறு உபாதைகள் முதல் பல்வேறு பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். இதேபோல், சாதாரண வெள்ளை சர்க்கரை போட்டு டீ அல்லது காபி குடிக்க வேண்டாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, மாலை 6 மணிக்கு மேல் டீ, காபி குடிப்பதை தவிர்க்க வேண்டும். இவற்றை குடித்ததும் புத்தணர்ச்சியாக தோன்றுவதால் இரவு நேர தூக்கம் பாதிக்கப்படும். மேலும், டீயில் ஏலக்காய், இஞ்சி ஆகியவற்றை சேர்த்து குடிக்கலாம் என்று அவர் பரிந்துரைக்கிறார்.
மாதத்திற்கு ஒரு முறை டீயுடன் சேர்த்து பஜ்ஜி போன்ற சிற்றுண்டி வகைகளை எடுத்துக் கொள்ளலாம். ஆனால், தொடர்ச்சியாக இவ்வாறு செய்தால் ஆரோக்கியம் பாதிக்கப்படும். எனவே, டீ, காபி குடிக்கும் போது இது போன்ற அனைத்து விஷயங்களையும் நினைவில் கொள்ள வேண்டும் என்று மருத்துவர் ஷர்மிகா தெரிவித்துள்ளார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.