/indian-express-tamil/media/media_files/2025/04/30/7fBkP4dzK5pxffKhpCON.jpg)
நம்முடைய வாழ்க்கையில் செல்போன் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. குறிப்பாக, அலுவலக பணி அல்லது நம்முடைய அன்றாட வேலைகளை பார்க்கும் போது கூட செல்போன் பயன்படுத்தும் அளவிற்கு நம்முடைய மனம் பழக்கப்பட்டிருக்கிறது.
அந்த வகையில் இந்தியர்கள் சராசரியாக ஒரு நாளைக்கு 4 முதல் 6 மணி நேரம் செல்போன் பயன்படுத்துவதாக மருத்துவர் ஷர்மிகா தெரிவித்துள்ளார். இவ்வாறு செல்போனை தொடர்ச்சியாக பயன்படுத்துவதால் அதிகப்படியான கவனச் சிதறல் ஏற்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதிகப்படியான செல்போன் பயன்பாடு நம்மை பல வகைகளில் பாதிக்கிறது. உதாரணத்திற்கு, நம்முடைய வேலை, குடும்பத்தினருடனான நம்முடைய உறவுமுறை, நமது இலக்கு, ஞாபக திறன் மற்றும் கற்பனை திறன் என்று பல விஷயங்களை பாதிக்கிறது.
அதனால், செல்போன் பயன்பாட்டை குறைக்கும் போது தான் நமது அடுத்தகட்ட வளர்ச்சி இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதன்படி, ஒரு நாளைக்கு சராசரியாக இரண்டு மணி நேரங்களுக்கு மேல் செல்போன் பயன்படுத்தக் கூடாது என்று மருத்துவர் ஷர்மிகா அறிவுறுத்துகிறார்.
இந்த திடீர் மாற்றம் ஆரம்பத்தில் கடினமாக இருந்தாலும், அதன் பின்னர் தேவையான விஷயங்களில் நம்முடைய நேரத்தை செலவிட உதவும் என்று அவர் கூறுகிறார்.
நன்றி - DAISY HOSPITAL Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.