நரம்பு சுருட்டல்? காலுக்கு தலையணை; தையலம் இப்படி தேய்க்கணும்: டாக்டர் ஷர்மிகா டிப்ஸ்
நரம்பு சுருட்டு பாதிப்பு ஏற்படும் காரணம் குறித்து மருத்துவர் ஷர்மிகா தெரிவித்துள்ளார். மேலும், இதனை கட்டுப்படுத்துவதற்கான சில வழிமுறைகள் குறித்தும் அவர் தெரிவித்துள்ளார். அவற்றை தற்போது காணலாம்.
நரம்பு சுருட்டு பாதிப்பு ஏற்படும் காரணம் குறித்து மருத்துவர் ஷர்மிகா தெரிவித்துள்ளார். மேலும், இதனை கட்டுப்படுத்துவதற்கான சில வழிமுறைகள் குறித்தும் அவர் தெரிவித்துள்ளார். அவற்றை தற்போது காணலாம்.
நீண்ட நாட்களாக ஒரே இடத்தில் நின்று கொண்டே வேலை பார்ப்பவர்களுக்கு நரம்பு சுருட்டல் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக மருத்துவர் ஷர்மிகா கூறுகிறார். இதேபோல், பல நாட்களாக ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்ப்பவர்களுக்கு இந்த பிரச்சனை ஏற்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
Advertisment
இதற்காக மருந்துகள் எடுத்துக் கொள்வதன் மூலம் நரம்பு சுருட்டு பாதிப்பை குறைக்க முடியும். மேலும், தினசரி எடுத்துக் கொள்ளும் மருந்துகளுடன் சேர்த்து சில வாழ்க்கை முறை மாற்றங்களையும் பின்பற்றலாம் என்று மருத்துவர் ஷர்மிகா தெரிவித்துள்ளார். இவை அதன் பாதிப்பை குறைக்கும் என்று அவர் அறிவுறுத்துகிறார்.
அதன்படி, தினசரி 30 நிமிடங்களாவது நடைபயிற்சி செல்ல வேண்டும் என்று மருத்துவர் ஷர்மிகா தெரிவித்துள்ளார். தினசரி செல்ல முடியாதவர்கள் வாரத்திற்கு 5 நாட்களாவது இதனை பின்பற்றலாம் என்று அவர் கூறுகிறார். இது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகிறது.
மேலும், நரம்பு சுருட்டு பாதிப்பால் அவதிப்படுபவர்கள் இரவு உறங்கும் போது காலில் தலையணை வைத்து தூங்கலாம் என்று மருத்துவர் ஷர்மிகா தெரிவித்துள்ளார். இதேபோல், காலுக்கு தைலம் தேய்க்கும் பழக்கம் நிறைய பேருக்கு இருக்கிறது. அப்போது, தைலத்தை காலின் மேற்பகுதியை நோக்கி தேய்க்க வேண்டும் எனவும், கீழ் நோக்கி தேய்க்கக் கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Advertisment
Advertisements
இது தவிர நீண்ட நேரத்திற்கு அமர்ந்து இருப்பதையும், நீண்ட நேரத்திற்கு நின்று கொண்டு இருப்பதையும் தவிர்க்க வேண்டும். குளிர்ச்சியான பொருட்களை சாப்பிடக் கூடாது என்று மருத்துவர் ஷர்மிகா தெரிவித்துள்ளார். உணவு வகைகளில் நீர்ச்சத்து, நார்ச்சத்து மற்றும் புரதச் சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடலாம்.
நன்றி - DAISY HOSPITAL Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.