இரவு தூங்கச் செல்வதற்கு முன்பு இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க; டாக்டர் ஷர்மிகா அட்வைஸ்
இரவு உறங்கச் செல்வதற்கு முன்பாக நாம் பின்பற்ற வேண்டிய சில வழிமுறைகள் குறித்து மருத்துவர் ஷர்மிகா தெரிவித்துள்ளார். குறிப்பாக, இவை அனைத்தையும் தினசரி தாம் பின்பற்றுவதாக அவர் கூறுகிறார்.
இரவு உறங்கச் செல்வதற்கு முன்பாக நாம் பின்பற்ற வேண்டிய சில வழிமுறைகள் குறித்து மருத்துவர் ஷர்மிகா தெரிவித்துள்ளார். குறிப்பாக, இவை அனைத்தையும் தினசரி தாம் பின்பற்றுவதாக அவர் கூறுகிறார்.
நாள் முழுவதும் கடுமையாக உழைத்து வீடு திரும்பிய பின்னர் இரவு உறங்கச் செல்வதற்கு முன்பாக சில வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் நம்முடைய ஆரோக்கியத்தை உறுதி செய்ய முடியும். அந்த வகையில், தினசரி தான் பின்பற்றி வரும் சில விஷயங்களை மருத்துவர் ஷர்மிகா தெரிவித்துள்ளார். அவற்றை இந்தக் குறிப்பில் பார்க்கலாம்.
Advertisment
அதன்படி, இரவு வீடு திரும்பியதும் முதல் வேலையாக குளிக்க வேண்டும் என்று மருத்துவர் ஷர்மிகா அறிவுறுத்துகிறார். இது நம்முடைய சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் தொடங்கி பல்வேறு நன்மைகளை அளிக்கும்.
அடுத்தபடியாக, தூங்குவதற்கு முன்பாக தலைமுடியை நன்றாக சீவி விட வேண்டும் என்று மருத்துவர் ஷர்மிகா அறிவுறுத்துகிறார். குறிப்பாக, 2 நிமிடங்களுக்கு முடியின் வேர்ப்பகுதியில் இருந்து நுனிப்பகுதி வரை சீவ வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். இது முடியை சரியாக பராமரிக்க உதவும்.
இதையடுத்து, கழுத்துப் பகுதியில் மெலிதாக மசாஜ் செய்யலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். கழுத்தின் கீழ் இருந்து மேல் நோக்கி இரண்டு விரல்களை கொண்டு மெதுவாக மசாஜ் செய்வது ரிலாக்ஸான உணர்வை கொடுக்கும்.
Advertisment
Advertisements
இதன் பின்னர், குங்குமாதி எண்ணெய்யை சில துளிகள் எடுத்து முகத்தில் தேய்த்து மசாஜ் செய்யலாம் என்று மருத்துவர் ஷர்மிகா கூறுகிறார். இவ்வாறு மசாஜ் செய்வதன் மூலம் இரத்த ஓட்டம் சீராக இருப்பதுடன், பார்ப்பதற்கு பொலிவாகவும் இருக்கும்.
இறுதியாக, பல் துலக்கிய பின்னர் தூங்குவதற்கு முன்பாக பாதங்களில் லேசாக தேங்காய் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்யலாம் என்று மருத்துவர் ஷர்மிகா தெரிவித்துள்ளார். இப்படி 2 நிமிடங்களுக்கு செய்தால், நன்றாக தூக்கம் வரும் என்று அவர் கூறியுள்ளார். இவை அனைத்தையும் பின்பற்றுவதன் மூலம் நம்முடைய ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும் என்று மருத்துவர் ஷர்மிகா வலியுறுத்தியுள்ளார்.
நன்றி - DAISY HOSPITAL Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.