பியூட்டி பார்லரே தேவையில்லை; இந்த ஒரு ஃபேஸ்பேக் உங்க முகத்தை பொலிவாக மாற்றும்: டாக்டர் ஷர்மிகா
வெயிலில் அதிகமாக செல்வதால் உங்கள் முகம் கருமையாக மாறி விட்டதா? அப்படியென்றால், மருத்துவர் ஷர்மிகா பரிந்துரைக்கும் இந்த ஃபேஸ்பேக்கை பயன்படுத்தி பாருங்கள். இதனை வீட்டிலேயே தயாரித்துக் கொள்ள முடியும்.
வெயிலில் அதிகமாக செல்வதால் உங்கள் முகம் கருமையாக மாறி விட்டதா? அப்படியென்றால், மருத்துவர் ஷர்மிகா பரிந்துரைக்கும் இந்த ஃபேஸ்பேக்கை பயன்படுத்தி பாருங்கள். இதனை வீட்டிலேயே தயாரித்துக் கொள்ள முடியும்.
கால நிலை மாற்றத்தால் தற்போது வெயிலின் தாக்கம் அனைத்து ஊர்களில் அதிகமாக காணப்படுகிறது. இந்த சூழலில் உடலை குளிர்ச்சியாக வைத்திருப்பதற்கு நிறைய பழங்கள் மற்றும் நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகள் சாப்பிட வேண்டும் என வல்லுநர்கள் கூறுகின்றனர்.
Advertisment
இந்த வெயிலால் அதிகமாக பாதிக்கப்படுவது நம் சருமமும் தான். தினசரி பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகம் என வெளியே செல்ல வேண்டிய சூழல் அனைவருக்கும் இருக்கிறது. இன்னும் சிலர் பணியின் நிமித்தமாக அடிக்கடி பயணம் செய்யும் நிலையில் இருக்கின்றனர்.
அவர்களுக்கு இருக்கக் கூடிய முதல் கவலையே முகம் கருமையாக மாறுவது தான். இதற்காக அடிக்கடி பியூட்டி பார்லருக்கு சென்று ஃபேஷியல் செய்வதும் சாத்தியம் கிடையாது. ஆனால், முகத்தில் கருமையை போக்குவதற்காக நாமே ஒரு ஹோம்மேட் ஃபேஸ்பேக்கை தயாரிக்கலாம் என மருத்துவர் ஷர்மிகா தெரிவித்துள்ளார்.
அதன்படி, நம் முகத்திற்கு தேவையான அளவிற்கு பாசி பயிறு மாவு மற்றும் ஆரஞ்சு பழச் சாறு சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். இத்துடன் சிறிதளவு தேங்காய் எண்ணெய் சேர்த்துக் கொள்ளலாம். இவை மூன்றும் பசை பதத்திற்கு வரும் வரை கலந்து கொள்ள வேண்டும்.
Advertisment
Advertisements
இவ்வாறு செய்தால் சூப்பரான ஃபேஸ்பேக் தயாராகி விடும். இதனை முகத்தில் தடவி விட்டு, சுமார் 20 நிமிடங்கள் கழித்து கழுவி விடலாம். இவ்வாறு தொடர்ந்து செய்தால் முகத்தில் இருக்கும் கருமை நீங்கி விடும் என மருத்துவர் ஷர்மிகா தெரிவித்துள்ளார். குறிப்பாக, இதனை ஒரு நாளைக்கு இரண்டு முறை தான் பயன்படுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார்.
நன்றி - Dr. sharmika Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.