பொடுகு தொல்லைக்கு ஈசி தீர்வு; டாக்டர் ஷர்மிகா சொல்லும் ஹேர்கேர் டிப்ஸ்
பொடுகு தொல்லையை போக்குவதற்கு முட்டை மற்றும் தயிர் ஆகியவை கொண்டு தயாரிக்கப்படும் ஹேர்பேக்கை பயன்படுத்தலாம் என மருத்துவர் ஷர்மிகா பரிந்துரைத்துள்ளார். இதனை வீட்டிலேயே தயாரிக்க முடியும்.
முடி உதிர்வுக்கு எத்தனையோ காரணங்களை வல்லுநர்கள் கூறுகின்றனர். உதாரணத்திற்கு, உணவு முறை மாற்றம், வாழ்க்கை முறை மாற்றம், மன அழுத்தம், சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் சத்துக் குறைபாடு என்று நிறைய காரணங்கள் இருக்கின்றன.
Advertisment
எனினும், பெரும்பாலான மக்களுக்கு பொடுகு பிரச்சனையின் காரணமாக முடி உதிர்வு இருக்கிறது. உடலில் உஷ்ணம் அதிகரிக்கும் போது அதனால் ஏற்படும் வறட்சித் தன்மை காரணமாக பொடுகு உருவாகிறது என்று கூறப்படுகிறது.
பொடுகு தொல்லை முடி உதிர்வு பிரச்சனை மட்டுமின்றி மேலும் சில சுகாதார குறைபாடுகளையும் ஏற்படுத்தும். எனவே, இதனை விரைவாக போக்குவது அவசியம். இதற்காக கடைகளில் ஏராளமான ஷம்புக்கள், ஹேர் சீரம் போன்றவை விற்கப்படுகிறது.
எனினும், இவற்றில் இரசாயனங்கள் கலந்திருப்பதால் இவை வேறு ஏதேனும் பிரச்சனைகளுக்கு வழிவகுக்குமோ என்ற தயக்கம் சிலரிடம் இருக்கும். அந்த வகையில், இயற்கையான முறையில் பொடுகு தொல்லையை போக்குவதற்கான சிம்பிளான டிப்ஸை மருத்துவர் ஷர்மிகா தெரிவித்துள்ளார்.
Advertisment
Advertisements
இதற்காக நம் வீட்டிலேயே ஹேர்பேக் தயாரிக்க முடியும். அதன்படி, இரண்டு முட்டையின் வெள்ளைக் கருவை மட்டும் தனியாக பிரித்துக் கொள்ள வேண்டும். இத்துடன் இரண்டு ஸ்பூன் தயிர் கலந்தால் நம் முடிக்கு தேவையான ஹேர்பேக் ரெடியாகி விடும்.
இந்த ஹேர்பேக்கை தலைமுடியின் வேர்க்கால்களில் நன்றாக தடவி விட்டு சுமார் 20 முதல் 30 நிமிடங்கள் கழித்து கழுவி விடலாம். இவ்வாறு செய்தால் பொடுகு தொல்லை நீங்கி விடும் என்று மருத்துவர் ஷர்மிகா தெரிவித்துள்ளார்.
இவ்வாறு வீட்டில் தயாரிக்கப்படும் ஹேர்பேக்குகளில் இரசாயனங்கள் கலக்கப்படுவதில்லை. இதனால், பக்க விளைவுகள் மற்றும் ஒவ்வாமை ஏற்படும் வாய்ப்பு இல்லை.
நன்றி - DAISY HOSPITAL Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.