முடி ஒரு இன்ச் கூட வளர மாட்டேங்குதா? நச் தீர்வு சொல்லும் டாக்டர் ஷர்மிகா
முடியின் வளர்ச்சியை அதிகரிப்பதற்கான எளிய வழிமுறையை மருத்துவர் ஷர்மிகா தெரிவித்துள்ளார். இதனை பின்பற்றுவதன் மூலம் நம் முடியின் வளர்ச்சியை அதிகரிக்க முடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய சூழலில் பெரும்பாலானவர்கள் முடி உதிர்வு பிரச்சனையால் அவதிப்பட்டு வருகின்றனர். வாழ்க்கை முறை மாற்றம், உணவு முறை மாற்றம், பணி நேரம், மன அழுத்தம் மற்றும் பொடுகு தொல்லை என பல விதமான காரணங்கள் முடி உதிர்வு பிரச்சனைக்காக கூறப்படுகிறது.
Advertisment
இது ஒரு புறமிருக்க, போதுமான முடி வளர்ச்சி இல்லாமல் சிலர் சிரமப்படுகின்றனர். உதாரணமாக, நீண்ட நாட்களுக்கு முன்னர் முடி வெட்டி இருந்தாலும் முடி ஒரு இன்ச் கூட வளரவில்லை எனக் கூறுபவர்கள் ஏராளமாக உள்ளனர். அந்த வகையில் முடியின் வளர்ச்சியை அதிகரிக்க மருத்துவர் ஷர்மிகா எளிய வழிமுறையை பரிந்துரைத்துள்ளார்.
அந்த வகையில், காலை மற்றும் இரவு என இரு வேளையும் சீப்பு கொண்டு தலை முடியை சுமார் 2 நிமிடங்கள் சீவ வேண்டும் என மருத்துவர் ஷர்மிகா கூறுகிறார். குறிப்பாக, இரவு நேரத்தில் தலை முடியை சீவி விடுவது கூடுதல் பலன் அளிக்கும் என்று அவர் கூறுகிறார்.
இவ்வாறு செய்யும் போது தலை பகுதியில் இரத்த ஓட்டம் சீராக இருக்கும். இது முடி வளர்ச்சியை அதிகரிக்க உதவும் என்று கூறப்படுகிறது. இப்படி செய்தால் சுமார் ஒரு மாதத்தில் முடி வளர்ச்சி அதிகமாக இருக்கும் என்று அவர் கூறுகிறார்.
Advertisment
Advertisements
மேலும், இதற்கு பயன்படுத்தும் சீப்பு தரமானதாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அகலமான சீப்பாக இருத்தல் அவசியம். இதேபோல், மரத்தால் செய்யப்பட்ட சீப்பையும் பயன்படுத்தலாம் என்று மருத்துவர் ஷர்மிகா கூறுகிறார்.
இந்த முறையில் வலி அல்லது காயம் ஏற்படாமல் நிதானமாக செய்வது அவசியம். அதன்படி, தொடர்ச்சியாக செய்யும் போது முடி வளர்ச்சி தூண்டப்படும் என்று மருத்துவர் ஷர்மிகா அறிவுறுத்துகிறார்.
நன்றி - DAISY HOSPITAL Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.