/indian-express-tamil/media/media_files/2025/08/14/dr-sharmika-bed-room-tour-2025-08-14-00-30-19.jpg)
Dr Sharmika Bed Room Tour
சமூக வலைதளங்களில், குறிப்பாக யூடியூப்-ல், இளைஞர்களின் கவனத்தை ஈர்த்துவரும் ஒரு நட்சத்திரம், டாக்டர் ஷர்மிகா. மருத்துவம், உணவு, ஃபேஷன், பயணம் என பலவிதமான தலைப்புகளில் அவர் வெளியிடும் வீடியோக்கள் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. சமீபத்தில், அவர் தனது படுக்கையறையை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தும் விதமாக ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். இந்த வீடியோவில் அவர் தனது படுக்கையறை, அதன் அமைப்புகள், பொருட்களைப் பற்றி விளக்கமாகப் பேசியுள்ளார்.
என் வீட்டு டூர் ஏற்கெனவே நீங்க பார்த்திருப்பீங்க. ஆனா, வீடு ரொம்ப மாறிப் போச்சு. இப்போ, என் பெட்ரூம் டூர் காட்டுறேன். ஏன்னா, வீடு ஃபுல்லா கொஞ்சம் மினிமலிஸ்டிக்கா இருந்தப்போ, இப்போ கொஞ்சம் மேக்ஸிமலிஸ்ட்டா மாறிடுச்சு. அதனால, இப்போ நான் என்னோட பெட்ரூம் டூர் காட்டுறேன். இதை காட்டுறதுக்கு ஒரு முக்கியமான காரணம் இருக்கு. நான் வந்து கொஞ்சம் என் ரூமை புதுப்பிச்சு இருக்கேன். சரி, வாங்க, ரூம்குள்ள போலாம்!
தனிப்பட்ட உலகம்: பெட்ரூம்
பொதுவா, பெட்ரூம் டூர் யாரும் காட்ட மாட்டாங்க. ஏன்னா அது ஒரு பர்சனல் ஸ்பேஸ்னு சொல்லுவாங்க. ஆனா, என் ரூம்ல அப்படி பர்சனலா காட்ட ஒண்ணும் இல்லை. சின்ன வயசுல இருந்தே எனக்குன்னு ஒரு பெட்ரூம் இருக்கணும்னு நிறைய கனவு கண்டிருக்கேன்.
ஹாஸ்டல்ல இருக்கும்போது கூட ரொம்ப ஒழுங்கா இருப்பேன். பெட்டியை மடிச்சு வச்சிருப்பேன். நானும் அக்காவும் ஃபர்ஸ்ட் ஸ்டாண்டர்ட்ல இருந்து நாலாவது வரைக்கும் ஹாஸ்டல்ல இருந்தோம். அப்போ இருந்த அந்த ட்ரங்க் பெட்டிதான் எங்களுக்கு பீரோ. அதுல, கண்ணாடின்னு குட்டியா வச்சிருப்போம். மேக்கப் கிட்டுக்கு ஒரு பாக்ஸ்னு, நைட் டிரஸ்ஸு, இன்னர்வேர்ஸ்னு எல்லாமே தனித்தனியா வச்சிருப்பேன். எங்களோட அந்த குட்டியூண்டு ஸ்பேஸை அவ்வளவு ரசிச்சு வச்சிருப்போம்.
அழகான மினிமலிஸ்ட் கார்னர்
இந்த ட்ராவை நான் அமேசான்ல இருந்து வாங்கினேன். ஒரு ரூ.1300 நினைக்கிறேன். இந்த ட்ரால பெருசா எதுவும் இருக்காது. என் சார்ஜர், காரோட ஸ்பேர் கீ இதெல்லாம் இருக்கும். இது பார்ப்பதற்கு ரொம்ப எஸ்தெட்டிக்கா இருக்கும். பெட்ரூம்க்கு நல்ல ஒரு லுக் கொடுக்கும்.
இந்த கார்னர் ஒரு கனவு
இந்த கார்னர் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சது. செலவே இல்லன்னு நான் சொல்ல மாட்டேன். அமேசான்ல இந்த மாதிரி மிரர்ஸ் எல்லாம் ரூ.80 க்கு கிடைக்கும். அதை வாங்கி, இப்படி அழகா டெக்கரேட் பண்ணலாம்.
அப்புறம் இந்த வீட்டில் ஒரு பயங்கரமான கார்னர்னு சொல்லலாம். ஏன்னா, நான் தூங்கும்போது எதிர்பார்க்கிற ஒரு கார்னர் இது. இங்கு உட்கார்ந்து நான் சில சமயம் எழுதுவேன். என் புக்ஸ் எப்பவுமே இங்கதான் இருக்கும். இந்த கார்னர்தான் எனக்கு ஒரு உந்துதலை கொடுக்கும்.
என் வீட்டிலுள்ள ஒவ்வொரு பொருளும் ஒரு சின்னச் சின்ன கதையோட இருக்கு. நான் ஒரே மாசத்துல நாலு லட்ச ரூபா செலவு பண்ண மாட்டேன். ஒவ்வொரு மாசமும் மூவாயிரம், இரண்டாயிரம்னு ஏதாவது ஒரு குட்டி பொருளை வாங்கிட்டு வருவேன். அப்படி ஒவ்வொரு மாசமா சேர்த்த சில விஷயங்கள்தான் இது. இது ஒரே நாள்ல மாத்தின விஷயமே இல்லை. என்னுடைய புதிய ட்ரான்ஸ்ஃபார்மேஷன்தான் இந்த பெட்ரூம். இந்த வீடியோ உங்களுக்குப் பிடிச்சிருக்கும்னு நினைக்கிறேன், என்று புன்னகையுடன் முடிக்கிறார் டாக்டர் ஷர்மிகா.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.