தைராய்டு பிரச்சனை? சீக்கிரம் சரியாக இயற்கை மருத்துவம்: சொல்லும் டாக்டர் சிவராமன்
தைராய்டு பிரச்சனை தொடர்பாக பல்வேறு தகவல்களை மருத்துவர் சிவராமன் தெரிவித்துள்ளார். மேலும், இதற்கான இயற்கை மருத்துவம் குறித்தும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
தைராய்டு பிரச்சனை தொடர்பாக பல்வேறு தகவல்களை மருத்துவர் சிவராமன் தெரிவித்துள்ளார். மேலும், இதற்கான இயற்கை மருத்துவம் குறித்தும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
தைராய்டு பிரச்சனையின் பாதிப்புகள் குறித்து ஹெல்தி தமிழ்நாடு என்ற யூடியூப் சேனலில் மருத்துவர் சிவராமன் பேசியுள்ளார். இது மட்டுமின்றி அதற்கான இயற்கை மருத்துவம் குறித்தும் அவர் தெரிவித்துள்ளார்.
Advertisment
பெண்களுக்கு மாதவிடாய் வெளியாவதில் சிக்கல், திடீர் உடல் எடை அதிகரிப்பு அல்லது கழுத்துப் பகுதியில் வீக்கம் போன்றவை காணப்பட்டால் தைராய்டு குறைவாக இருக்கலாம் என்று மருத்துவர் சிவராமன் தெரிவித்துள்ளார். அதன்படி, இதனை சரி செய்வதற்கு மருந்துகள் பரிந்துரைக்கப்படுகின்றன.
மேலும், உணவு முறை மாற்றங்கள் மூலமாக தைராய்டு பிரச்சனையை சீரமைக்க முடியும் என்று மருத்துவர் சிவராமன் அறிவுறுத்துகிறார். அதனடிப்படையில், கடற்பகுதிக்கு தொலைவாக வசிப்பவர்களுக்கு தைராய்டு பாதிப்பு இருந்தால், அவர்கள் ஐயோடின் உப்பு எடுத்துக் கொள்ளலாம்.
இது தவிர தொடர்ச்சியாக மூச்சுப் பயிற்சி, யோகா பயிற்சி மற்றும் சூரிய நமஸ்காரம் செய்யலாம் என்று மருத்துவர் சிவராமன் அறிவுறுத்துகிறார். எனினும், மருத்துவர்கள் பரிந்துரைத்த மருந்துகளை நிறுத்திவிட்டு இது போன்ற பயிற்சிகளை மேற்கொள்ளக் கூடாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Advertisment
Advertisements
மேலும், நடைபயிற்சி மற்றும் உடற்பயிற்சியையும் தொடர்ச்சியாக செய்ய வேண்டும். கடல் பாசியை உணவில் சேர்த்துக் கொள்வது தைராய்டு பிரச்சனையை குறைக்க உதவும் என்று மருத்துவர் சிவராமன் கூறுகிறார். அந்தி மந்தாரை என்ற மூலிகையும் இதற்கு மருந்தாக பயன்படுகிறது.
ஆண்களைப் பொறுத்தவரை சர்க்கரை நோயாளிகளுக்கு தைராய்டு பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது. இது சில நேரத்தில் ஆண்மைக் குறைவிற்கும் வழிவகுக்கக் கூடும் என்று மருத்துவர் சிவராமன் எச்சரிக்கை விடுக்கிறார். எனவே, சரியான முறையில் உணவு முறை மற்றும் வாழ்க்கை முறை மாற்றத்தை பின்பற்ற வேண்டும் என்று அவர் அறிவுறுத்துகிறார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.