இளம் வயதில் நரைமுடி... இந்தக் கீரையை இப்படி யூஸ் பண்ணுங்க: இயற்கை தீர்வு சொல்லும் டாக்டர் சிவராமன்
இளம் வயதில் நரைமுடி ஏற்படுவதற்கான காரணத்தை மருத்துவர் சிவராமன் தெரிவித்துள்ளார். மேலும், இளநரையை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்தும் அவர் கூறியுள்ளார்.
இளம் வயதில் நரைமுடி ஏற்படுவதற்கான காரணத்தை மருத்துவர் சிவராமன் தெரிவித்துள்ளார். மேலும், இளநரையை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்தும் அவர் கூறியுள்ளார்.
இன்றைய இளைஞர்களுக்கு இருக்கும் பெரும் பிரச்சனையாக இளநரை உருவெடுத்து இருக்கிறது. முன்னர் இருந்த காலத்தில் வயோதிகத்தின் ஒரு அங்கமாக இளநரை காணப்பட்டது. ஆனால், இன்றைய சூழலில் சிறுவர்களுக்கு கூட சில முடிகள் நரைத்து இருக்கிறது என்று மருத்துவர் சிவராமன் தெரிவித்துள்ளார்.
Advertisment
முதலில் நரை முடி குறித்த புரிதல் நம்மிடையே இருக்க வேண்டும் என மருத்துவர் சிவராமன் கூறுகிறார். இந்த காலகட்டத்தில் தலை முடியை அலங்காரம் செய்யும் போக்கு பலரிடம் காணப்படுகிறது. முன்பெல்லாம் திருமணத்தின் போது தான் முடியை அலங்கரித்துக் கொள்வார்கள். தற்போது அடிக்கடி முடி அலங்காரத்தில் பலர் ஈடுபடுகின்றனர்.
இவ்வாறு அடிக்கடி சிகை அலங்காரங்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். அதேபோல், தலை முடியை பராமரிப்பதற்கு நமது வாழ்வியலும், உணவு முறையும் மிக முக்கியமானது. உடலில் சூடு உண்டாக்கும் உணவுகளை அடிக்கடி சாப்பிடக் கூடாது என மருத்துவர் சிவராமன் கூறுகிறார். அதன்படி, கோழிக்கறி, எண்ணெய்யில் பொறித்த உணவுகள், ஊறுகாய், சிப்ஸ் ஆகிய உணவுகளை அடிக்கடி சாப்பிடக் கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.
பழங்கள், கீரைகள் அதிகளவில் சாப்பிட வேண்டும். குறிப்பாக, கரிசலாங்கண்ணி கீரையை அவசியம் சாப்பிட வேண்டும். இந்தக் கீரை முடியில் கருமை நிறத்தை கொண்டு வருவதற்கு உதவியாக இருக்கும். கரிசலாங்கண்ணி சாறு எடுத்து, அதை தேங்காய் எண்ணெய்யுடன் சேர்த்து தலைக்கு தேய்த்துக் கொள்ளலாம் என்றும் சிவராமன் தெரிவித்துள்ளார்.
Advertisment
Advertisements
மேலும், கரிசலாங்கண்ணி கீரையை உணவாகவும் எடுத்துக் கொள்ளலாம். எனினும், சிலருக்கு இதனை தினசரி சாப்பிடுவது சிரமமாக இருக்கும். அவ்வாறு உணவாக எடுத்துக் கொள்ள முடியாதவர்கள், கரிசலாங்கண்ணி கீரையை பொடியாக மாற்றி, அதனை உணவுக்கு முன்பாக அரை ஸ்பூன் எடுத்துக் கொள்ளலாம்.
நெல்லிக்காயையும் நம் உணவில் அவசியம் சேர்த்துக் கொள்ள வேண்டும். இவை முடி வளர்ச்சி மட்டுமின்றி சருமம் சுருக்கம் அடைதல் போன்ற பிரச்சனைகளையும் தடுக்கிறது. அதன்படி, நெல்லிக்காயை வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை அப்படியே சாப்பிடலாம்.
இது போன்ற வாழ்க்கை முறை மற்றும் உணவு முறை மாற்றத்தை மேற்கொண்டு இளநரை பாதிப்பை சரி செய்யலாம் என்று மருத்துவர் சிவராமன் பரிந்துரைக்கிறார்.
நன்றி - health100 Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.