அன்றாடம் சாப்பிடும் உப்பில் இத்தனை ரசாயனம்... இனி இப்படி காய வச்சு யூஸ் பண்ணுங்க: மருத்துவர் சிவராமன்
அன்றாடம் சமையலுக்கு உபயோகிக்கும் உப்பை, எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று மருத்துவர் சிவராமன் விளக்கம் அளித்துள்ளார். மேலும், உப்பில் அதிகப்படியான இரசாயனங்கள் சேர்க்கப்படுவதாக அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அன்றாடம் சமையலுக்கு உபயோகிக்கும் உப்பை, எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று மருத்துவர் சிவராமன் விளக்கம் அளித்துள்ளார். மேலும், உப்பில் அதிகப்படியான இரசாயனங்கள் சேர்க்கப்படுவதாக அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தற்போதைய காலகட்டத்தில் சர்க்கரையின் பயன்பாடு ஏற்படுத்தும் தாக்கம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு இருக்கிறது. எனவே, அதனை சரியான அளவில் பயன்படுத்த தொடங்கி இருக்கின்றனர். ஆனால், உப்பு பயன்பாடு குறித்து பலருக்கு தெரியவில்லை என்று மருத்துவர் சிவராமன் கூறுகிறார். குறிப்பாக, நிறைய இரசாயனங்கள் சேர்க்கப்பட்ட உப்பின் பயன்பாடு அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
Advertisment
உதாரணத்திற்கு பொட்டாஷியம் நைட்ரேட், சோடியம் நைட்ரேட், மோனோசோடியம் ப்ளூட்டமேட் மற்றும் சோடியம் பென்சலேட் என்று பல விதமான இரசாயன உப்பு இப்போது சந்தையில் கிடைப்பதாக அவர் கூறுகிறார். ஐயோடின் சேர்க்கப்பட்ட உப்பை தேவைக்கு அதிகமாக எடுத்துக் கொண்டதன் விளைவாக, பலருக்கு தைராயிடு பிரச்சனை ஏற்பட்டதாக மருத்துவர் சிவராமன் கூறுகிறார்.
எனவே, இது போன்ற பாதிப்புகளில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ள இயற்கையான உப்பை பயன்படுத்தலாம் என்று மருத்துவர் சிவராமன் அறிவுறுத்துகிறார். ஆனால், தற்போது இயற்கையான உப்பை வாங்குவது சிரமமாக இருப்பதாக பலரும் கூறுகின்றனர். அந்த வகையில் உப்பை பயன்படுத்தும் முறை குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.
அதன்படி, கடையில் இருந்து வாங்கிய உப்பை வெயிலில் காய வைக்க வேண்டும் என்று மருத்துவர் சிவராமன் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு செய்தால் அதில் இருக்கும் ஐயோடின் ஆவியாகி விடும் என்றும், அதன் பின்னர் உப்பை பாட்டிலில் அடைத்து பயன்படுத்தலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
Advertisment
Advertisements
இன்று நாம் சாப்பிடும் உணவு பொருட்களில் பெரும்பாலானவை இரசாயனங்களால் சூழப்பட்டுள்ளன. இவற்றை சரியாக கண்டறிந்து தவிர்ப்பதன் மூலமாக நம்முடைய ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும் என்று மருத்துவர் சிவராமன் அறிவுறுத்துகிறார்.
நன்றி - Tamil Speech Box Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.