பிராய்லர் கோழியால் ஏற்படும் ஆபத்துகள் குறித்தும், இறைச்சி தேர்வின் அவசியம் குறித்தும் மருத்துவர் சிவராமன் விளக்கமளித்துள்ளார்.
தற்போது இறைச்சி பெருவணிகமாக மாறி வருவதாக சிவராமன் கூறியுள்ளார். குறிப்பாக கூவ முடியாத, பறக்க முடியாத பிராய்லர் கோழிகளை மக்கள் அதிகளவில் சாப்பிடுவதாக கூறியுள்ள அவர், அத்தகைய கோழிகள் எவ்வாறு உருவாக்கப்படுகிறது எனத் தெரிவித்துள்ளார்.
அதன்படி, பிராய்லர் கோழிகளின் சதைகளை வீங்க வைப்பதற்காக அதன் தீவனத்தில் தினசரி ஆன்டிபயாட்டிக் மருந்துகள் சேர்க்கபடுவதாக தெரிவித்தார். குறிப்பாக வாரம் ஒரு முறை என பிராய்லர் கோழியை உணவாக எடுத்துக் கொண்டால் கூட, ஒரு ஆண்டில் நாம் 52 முறை ஆன்டிபயாட்டிக் உட்கொண்டதற்கு சமம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, பிராய்லர் கோழிகளை விடுத்து நாட்டுக் கோழிகளை நாம் உணவாக எடுக்க சிவராமன் அறிவுறுத்தியுள்ளார். எனினும், தற்போது நாட்டுக் கோழிகளும் அவ்வாறு பழக்கப்படுத்தப்படுவதால், இறைச்சி தேர்வில் கவனமாக இருக்க அவர் தெரிவித்துள்ளார்.
கோழி இறைச்சியைக் காட்டிகும் காடை இறைச்சியில் அதிகளவிலான சத்துகள் நிறைந்திருக்கிறது என மருத்துவர் சிவராமன் தெரிவித்துள்ளார். பல்வேறு நாடுகளில் அது பிரதான இறைச்சியாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. காடை முட்டை மற்றும் இறைச்சியில் நிறைய சத்துகள் இருப்பதால் மக்கள் அதனை அவசியம் சாப்பிட வேண்டுமென தெரிவித்துள்ளார்.
இதேபோல், இருப்பதிலேயே சிறப்பான இறைச்சி மீன் எனக் குறிப்பிட்டுள்ள அவர், நம் உடலுக்கு கிடைக்ககூடிய உடனடி சத்துகள் மீனில் இருந்து கிடைக்கும் என தெரிவித்துள்ளார்.
எனவே, நாம் சாப்பிடும் உணவை கவனமாக தேர்வு செய்ய வேண்டுமென சிவராமன் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“