பித்தம் குறைய வேண்டும் என்பதற்காக தான் காலையில் குளிக்கிறோம் என மருத்துவர் சிவராமன் தெரிவித்துள்ளார். சுத்தத்தை பிரதானமாக கொண்டு குளிக்க வேண்டுமானால் இரவில் தான் குளிப்பார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
காலை நேரத்தில் உடலில் பித்தம் கூடுதலாக இருக்கும். அதை குறைப்பதற்காக குளிப்பதே முதன்மையானது என்று அவர் விளக்கமளித்துள்ளார். குளிப்பதிலும் பல பேர் தலைக்கு குளிப்பதில்லை என சிவராமன் குறிப்பிடுகிறார்.
வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே தலைக்கு குளிப்பதாக பலர் கூறுகிறார்கள். ஆனால், குளித்தல் என்றாலே தலைக்கு குளிப்பது தான் என மருத்துவர் சிவராமன் கூறுகிறார். நோய் எதிர்ப்பில் பெரும் பங்காற்றுவது பித்தம் எனக் கூறும் அவர், பித்தத்தை குறைப்பதற்காகவே காலை நேரத்தில் தலைக்கு குளிக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறார். எனவே, பித்தத்தை சீராக வைத்திருக்க தலைக்கு குளித்தல் பயன்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
குழந்தை பருவத்தில் இருந்து இதனை பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும், எண்ணெய் தேய்த்து குளித்தல் கூடுதல் நன்மைகளை தரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதன்படி, வாரத்திற்கு ஒரு முறை எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.