இந்த காலகட்டத்தில் பலருக்கும் நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைந்து வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக, சாதாரண காய்ச்சல் தொடங்கி புற்றுநோய் வரை தற்போதைய சூழலில் அதிகமாக பரவி வருகிறது. இதற்கு மிக முக்கிய காரணமாக வாழ்க்கை முறை மாற்றம் மற்றும் உணவு முறை மாற்றம் பங்கு வகிப்பதாக வல்லுநர்கள் கூறுகின்றனர்.
நோய் தாக்கிய பின்னர் மருந்து எடுத்துக் கொள்வது எவ்வளவு அவசியமோ, அதே அளவு நோயை எதிர்க்கும் வகையில் சத்தான உணவுகளை சாப்பிடுவதும் அவசியம். அதன்படி, நாம் சாப்பிட வேண்டிய அரிசியின் முக்கியத்துவம் குறித்து மருத்துவர் சிவராமன் தெரிவித்துள்ளார்.
பார்ப்பதற்கு வெள்ளையாக இருக்கக் கூடிய அரிசி மட்டுமே இன்று சந்தையில் இருக்கும் சூழல் இருப்பதாக மருத்துவர் சிவராமன் தெரிவித்துள்ளார். அப்படி இல்லாமல் நம் சுற்றுப்புறத்திற்கு அருகாமையில் விளையக் கூடிய அரிசிகளை உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
உதாரணமாக, சிவப்பு நிறத்தில் இருக்கும் மாப்பிள்ளை சம்பா அரிசியை நம் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இதில் இருக்கும் அன்டி ஆக்சிடென்ட்ஸ் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாக மருத்துவர் சிவராமன் குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல், கருப்பு கவுனி அரிசியில் அதிகப்படியான சத்துகள் இருக்கிறது என ஆய்வு முடிவுகள் கூறுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். புற்றுநோயை தடுக்கும் தன்மை கொண்ட அந்தோசைனின்ஸ் என்று சொல்லக்கூடிய மருத்துவ குணம் கருப்பு கவுனி அரிசியில் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“