அவசரமாக பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் பல நேரங்களில் காலை உணவு சாப்பிடாமல் செல்கின்றனர். இதனால் தான் அரசு சார்பில் காலை உணவு திட்டம் வலியுறுத்தப்பட்டுள்ளதாக மருத்துவர் சிவராமன் தெரிவித்துள்ளார்.
நாம் பெரும்பாலான நேரத்தில் குழந்தைகளுக்கு குறைவான அளவே புரதம் கொடுப்பதாக கூறப்படுகிறது. புரதம் தான் நமது தசைகளுக்கு வலு சேர்க்கும். நோய் எதிர்ப்பு ஆற்றலை வழங்கும். கம்பு, சோளம் ஆகியவற்றில் புரதச் சத்து அதிகமாக இருக்கிறது. இதேபோல், சுண்டல் மற்றும் முட்டை ஆகியவற்றை கொடுக்கலாம்.
மேலும், குழந்தைகளுக்கு கட்டாயம் ஒரு வாழைப்பழத்தை காலை நேரத்தில் கொடுக்க வேண்டும். வளரும் குழந்தைகளுக்கு வாழைப்பழம் மிக அவசியமாகும். கூடுதல் ஆற்றல் வேண்டுமென்றால் செவ்வாழை பழம் அவசியம் கொடுக்கலாம். செரட்டோனின் ஹார்மோன் சுரப்பதற்கும் வாழைப்பழம் உதவி செய்கிறது.
இதேபோல், மாதுளை பழத்தையும் குழந்தைகளுக்கு கொடுக்கலாம். மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாதுளை பழச்சாறு கொடுக்கப்படுவதாக மருத்துவர் சிவராமன் தெரிவித்துள்ளார். மாதுளை பழம் புற்றுநோயை எதிர்க்கக் கூடியது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனவே, இதுபோன்ற பழங்களையும், உணவுகளையும் சிறுவயதில் இருந்தே குழந்தைகளுக்கு கொடுக்கலாம் என மருத்துவர் சிவராமன் பரிந்துரைத்துள்ளார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“