பூண்டு எவ்வாறு நம் ஆரோக்கிய தேவைகளை பூர்த்தி செய்கிறது என மருத்துவர் சிவராமன் குறிப்பிட்டுள்ளார். அவை குறித்து தற்போது காணலாம்.
உடல் எடை அதிகமாக இருப்பவர்கள் மற்றும் இரத்தத்தில் கொழுப்பு அதிகமாக இருப்பவர்கள் தங்கள் உணவில் அவசியம் பூண்டு சேர்த்துக் கொள்ள வேண்டும். உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றலை பூண்டு அதிகரிக்கிறது.
செரிமான பிரச்சனைகளை பூண்டு சரி செய்யக் கூடியது. குழந்தைகளுக்கு அவசியம் கொடுக்கக் கூடிய உணவு பொருளாக பூண்டு விளங்குகிறது. குழந்தைகளுக்கு டான்சில் என்னும் உள்நாக்கு அழற்சி வராமல் தடுக்க பூண்டு பயன்படுத்தப்படுகிறது. அந்த காலத்தில் பூண்டு சாறு எடுத்து அதனை தேனில் குழைத்து வைத்துக் கொள்வார்கள். இதை உள்நாக்கில் தடவும் போது அழற்சி போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கும்.
வெங்காயம் பெண்களின் கருத்தரிப்புக்கு உதவியாக இருப்பதை போன்று, பூண்டும் கருமுட்டை உருவாவதற்கு உதவியாக இருக்கிறது. மாதவிடாய் சீரற்ற நிலையில் இருப்பதை சரி செய்ய பூண்டு பயன்படுகிறது. பெண்களுக்கு மாதவிடாய் தொடங்கிய 10-வது நாளில் இருந்து தினசரி உணவில் பூண்டு சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“