நாம் தினமும் சாப்பிடும் இந்த பொருளின் சிவப்பு நிறம்… ஆண்களுக்கு வரும் புரோஸ்டேட் கேன்சரை தடுக்கும்; டாக்டர் சிவராமன்
ஆண்களுக்கு ஏற்படும் புரோஸ்டேட் கேன்சரை தடுக்கும் ஆற்றல் தக்காளி பழத்தின் தோலுக்கு இருக்கிறது என்று மருத்துவர் சிவராமன் கூறுகிறார். இதற்கான விளக்கத்தையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆண்களுக்கு ஏற்படும் புரோஸ்டேட் கேன்சரை தடுக்கும் ஆற்றல் தக்காளி பழத்தின் தோலுக்கு இருக்கிறது என்று மருத்துவர் சிவராமன் கூறுகிறார். இதற்கான விளக்கத்தையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் காலகட்டத்தில் ஏராளமானோர் புற்றுநோயினால் பாதிக்கப்படுகின்றனர். மனிதர்களிடையே ஏற்பட்டுள்ள வாழ்க்கை முறை மாற்றம் மற்றும் உணவு முறை மாற்றத்தின் காரணமாக இந்த பாதிப்பு வருவதாக வல்லுநர்கள் கூறுகின்றனர்.
Advertisment
ஆனால், நாம் அன்றாடம் சாப்பிடும் எளிய பொருட்களில் கூட புற்றுநோயை தடுக்கும் ஆற்றல் இருக்கிறது என்று மருத்துவர் சிவராமன் கூறுகிறார். அத்தகைய சத்து நிறைந்த உணவுகளை நாம் அவசியம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
தக்காளி பழத்தின் மேல் பகுதியில் சிவப்பு நிறத்தில் இருக்கும் தோல், புற்றுநோயை தடுக்கும் ஆற்றல் வாய்ந்தது என்று மருத்துவர் சிவராமன் தெரிவித்துள்ளார். ஏனெனில், லைகோபின் என்ற சத்து அதில் இயற்கையாகவே இருக்கிறது.
இதேபோன்று, சம்பா அரிசியிலும் இந்த லைகோபின் என்ற சத்து இருக்கிறது என்று மருத்துவர் சிவராமன் தெரிவித்துள்ளார். மேலும், மாதுளம் பழத்திலும் இந்த சத்து காணப்படுகிறது. எனவே, இந்தப் பொருட்களை அவசியம் சாப்பிட வேண்டும் என்று அவர் அறிவுறுத்துகிறார்.
Advertisment
Advertisements
எனினும், சிறுநீரக கல் இருப்பவர்கள் தக்காளி பயன்படுத்துவதை தவிர்த்து விடலாம் என்று மருத்துவர் சிவராமன் கூறுகிறார். முன்னர் இருந்த காலத்தில் புரோஸ்டேட் கேன்சர் பெரும்பாலும் மேற்கத்திய ஆண்களுக்கு மட்டுமே பரவும் வகையில் இருந்தது.
ஆனால், தற்போதைய சூழலில் இந்தியாவில் இருக்கும் பலருக்கு இந்த புரோஸ்டேட் கேன்சர் பரவுவதாக மருத்துவர் சிவராமன் கூறுகிறார். இது போன்ற கேன்சர் பாதிப்புகள் பரவுவதை தடுக்கும் ஆற்றல் தக்காளி மற்றும் மாதுளம் பழத்தின் தொலில் இருக்கிறது என்று அவர் வலியுறுத்துகிறார்.
நன்றி - Healthy Tamilnadu Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.