முந்தைய தலைமுறையைச் சேர்ந்தவர்கள் பலரும் இன்றளவும் தலையில் எண்ணெய் தேய்க்கும் பழக்கத்தை கடைபிடிக்கின்றனர். ஆனால், இளம் தலைமுறையினரிடம் தான் அப்பழக்கம் தற்போது இல்லை. எனினும், தலைக்கு தேய்ப்பதற்கு தேங்காய் எண்ணெய்யை பயன்படுத்துவது ஆரோக்கியமா அல்லது நல்லெண்ணெய்யை பயன்படுத்துவது ஆரோக்கியமா என்ற கேள்வி பலருக்கு இருக்கும். அதற்கு மருத்துவர் சிவராமன் பதில் அளித்துள்ளார்.
Advertisment
பித்தத்தைக் குறைப்பதற்காக தலையில் நல்லண்ணெய்யை தேய்க்கும் பழக்கம் இருந்ததாக மருத்துவர் சிவராமன் கூறியுள்ளார். மற்றொரு புறம், உடல் அதிகப்படியான குளிர்ச்சியாக இருப்பவர்கள் தேங்காய் எண்ணெய்யை தலையில் தேய்த்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
உதாரணத்திற்கு, திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் தலைக்கு நல்லெண்ணெய்யை பயன்படுத்தும் பழக்கம் கொண்டவர்களாகவும், நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்தவர்கள் தலைக்கு தேங்காய் எண்ணெய்யை பயன்படுத்தும் பழக்கம் கொண்டவர்களாகவும் இருந்ததாக மருத்துவர் சிவராமன் கூறுகிறார்.
ஏனெனில், நாகர்கோவில் பகுதி குளிர்ச்சியான சூழலில் அமைந்திருக்கும். அதன் காரணத்தினால், அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தேங்காய் எண்ணெய்யை தேய்த்ததாக அவர் தெரிவித்துள்ளார். இதேபோன்று, வெப்ப மண்டல பகுதிகளில் வசிப்பவர்கள் நல்லெண்ணெய்யை தலைக்கு தேய்க்கும் வழக்கத்தை கடை பிடித்தனர்.
Advertisment
Advertisements
எனவே, தலைக்கு எண்ணெய் தேய்ப்பதை முடி வளர்ச்சியை தூண்டும் ஒரு காரணியாக பார்ப்பதை விட, உடலில் பித்தத்தை சீராக்கும் தன்மை இருப்பதாக புரிந்து கொள்ள வேண்டும். அந்த வகையில் ஒரு நபருடைய மரபியல் ரீதியான காரணங்கள் தான் முடி வளர்ச்சியை தீர்மானிப்பதாக மருத்துவர் சிவராமன் தெரிவித்துள்ளார்.
அதன்படி, நம் உடலின் தன்மை உணர்ந்து நம்முடைய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையிலான எண்ணெய்யை தேர்ந்தெடுத்து பயன்படுத்த வேண்டும் என மருத்துவர் சிவராமன் அறிவுறுத்துகிறார்.
நன்றி - Healthy Tamilnadu Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.