கெமிக்கல் இல்லா ஷாம்பூ; இந்த காயை பொடி செய்து யூஸ் பண்ணுங்க! மருத்துவர் சிவராமன்
பூந்திக்காயை எவ்வாறு ஷாம்பூவாக பயன்படுத்தலாம் என்று மருத்துவர் சிவராமன் விளக்கம் அளித்துள்ளார். குறிப்பாக, இரசாயனங்கள் சேர்க்கப்பட்ட ஷாம்பூக்களுக்கு இதனை மாற்றாக பயன்படுத்தலாம் என்று அவர் அறிவுறுத்துகிறார்.
தற்போதைய சூழலில் முடி உதிர்வு பிரச்சனையால் பெரும்பாலனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, வாழ்க்கை முறை மாற்றம், உணவு முறை மாற்றம் மற்றும் பொடுகு தொல்லை என பல்வேறு காரணங்கள் இதற்கு கூறப்படுகிறது.
Advertisment
முடி உதிர்வு பிரச்சனையை போக்குவதற்கு கடைகளில் இருந்து ஷாம்பூக்களை வாங்கி பயன்படுத்துகிறோம். ஆனால், இது போன்ற ஷாம்பூக்களில் சேர்க்கப்பட்டிருக்கும் இரசாயனங்கள் பக்கவிளைவுகளை ஏற்படுத்தக் கூடும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். அந்த வகையில் இயற்கையான பூந்திக் காயை எவ்வாறு ஷாம்பூவிற்கு மாற்றாக பயன்படுத்தலாம் என்று மருத்துவர் சிவராமன் தெரிவித்துள்ளார்.
பூந்திக்காயை அரைத்து பொடியாக்கி வைத்துக் கொள்ளலாம். இதனை தலைக்கு தேய்த்து குளித்தால் அத்தனை அழுக்குகளும் நீங்கி விடும் என்று மருத்துவர் சிவராமன் கூறுகிறார். சினிமாவில் காண்பிக்கப்படுவதை போன்றோ அல்லது விளம்பரங்களில் இருப்பதை போன்றோ அதிகமாக நுரைக்கும் தன்மை பூந்திக்காய்க்கு இருக்காது.
எனினும், அவ்வாறு நுரைக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை என மருத்துவர் சிவராமன் கூறுகிறார். அதிகமாக நுரை வந்தால் முடி ஆரோக்கியமாக இருக்கும் என்று நாம் தவறாக புரிந்து கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Advertisment
Advertisements
அழுக்குகளை இயற்கையாகவே நீக்கும் தன்மை பூந்திக்காய்க்கு இருக்கிறது. இது பொடுகு தொல்லையும் கட்டுப்படுத்தி முடி உதிர்வை குறைக்கிறது. இதேபோல், உடலுக்கு பாசிப்பருப்பு மாவை பயன்படுத்தலாம் என்று மருத்துவர் சிவராமன் பரிந்துரைக்கிறார்.
மேலும், சீவக்காயுடன் பூந்திக்காயை சேர்த்து தலைக்கு தேய்த்து குளித்தால் போதுமானது. இரசாயனங்கள் சேர்க்கப்பட்ட ஷாம்பூக்கள் அவசியம் கிடையாது என்று மருத்துவர் சிவராமன் அறிவுறுத்துகிறார்.
நன்றி - Healthy Tamilnadu Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.