முதுமை என்னும் பருவம் அடைவதை ஒருவராலும் தடுக்க முடியாது. ஆனால், முதுமையால் ஏற்படும் உடல் பிரச்சனைகள் போன்றவற்றை நம் உணவு முறை மூலமாக கட்டுப்படுத்த முடியும் என மருத்துவர் சிவராமன் கூறுகிறார். குறிப்பாக, நெல்லிக்காயை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் நம் முதுமைப் பருவத்தை கட்டுப்படுத்தலாம் என அவர் அறிவுறுத்துகிறார்.
பழங்காலத்தில் இருந்தே நெல்லிக்காய், முதுமையை கட்டுப்படுத்துவதாக கூறப்படுகிறது என மருத்துவர் சிவராமன் கூறுகிறார். அதன்படி, சருமத்தில் சுருக்கம் மற்றும் தளர்ச்சி போன்றவற்றை நெல்லிக்காய் குறைப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேபோல், மூட்டு தேய்மானம், கண்பார்வை குறைபாடு ஆகியவற்றையும் நெல்லிக்காய் கட்டுப்படுத்தும் என அவர் கூறியுள்ளார். நரையை நெல்லிக்காய் குறைக்கும் எனவும் மருத்துவர் சிவராமன் கூறியுள்ளார். அதன்படி, நெல்லிக்காயை வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை சாப்பிடலாம் என அவர் பரிந்துரைத்துள்ளார்.
இதற்காக, நெல்லிக்காய் கலந்த சத்தான பானத்தை தயாரித்து நாம் குடிக்கலாம். 2 நெல்லிக்காயை சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும். இத்துடன் சிறிது கறிவேப்பிலை, சிறிய துண்டு இஞ்சி, ஒரு டீஸ்பூன் சீரகம், சிறிது மிளகு, தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுக்க வேண்டும். இதனை, வடிகட்டி அத்துடன் சிறிது அளவு தேன் கலந்து குடிக்கலாம்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“