அசைவ உணவுகள் சாப்பிடுவதை 40 வயதுக்கு மேல் குறைக்க வேண்டும் என்று கூறுவார்கள். அது முற்றிலும் உண்மை இல்லை என மருத்துவர் சிவராமன் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, மீன் உணவுகள் எளிதாக செரிமானம் ஆகக் கூடிய தன்மை கொண்டது என சிவராமன் கூறுகிறார். இவை எந்த வயது இருப்பவர்கள் சாப்பிட்டாலும் சுலபமாக செரிமானம் ஆகிவிடும் என்று அவர் வலியுறுத்துகிறார். செரிமானத்திற்கு நேரம் எடுத்துக் கொள்ளக் கூடிய புரதங்கள் மற்றும் கொழுப்பு ஆகியவை மீனில் இல்லை என்பதால் இதனை எல்லோரும் சாப்பிடலாம் என்று சிவராமன் குறிப்பிடுகிறார். வயதான காலத்திலும் வேக வைத்த மீன்களை சாப்பிடலாம் என்று அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
அதன்படி, வயதானவர்கள் அசைவம் எடுத்துக் கொள்ளக் கூடாது என்று பொதுப்படையாக கூறுவதை நாம் பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை என்று மருத்துவர் சிவராமன் திட்டவட்டமாக கூறுகிறார்.
எனினும், அதிகப்படியாக எண்ணெய்யில் பொறித்து எடுத்த உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் எனக் கூறியுள்ள அவர், ஆவியில் வேக வைத்த உணவுகளை சாப்பிடலாம் என்று குறிப்பிடுகிறார். இதேபோல், மாட்டிறைச்சி மற்றும் ஆட்டிறைச்சி போன்றவற்றை குறைவாக சாப்பிடலாம் என்று பரிந்துரைத்துள்ளார்.
வயதான பின்பு உடல் உழைப்பு குறைந்து விடுவதால் இது போன்ற, உணவுகளை குறைத்துக் கொள்ளலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.