பித்தம், கபம் உடம்புக்கு இந்த எண்ணெய் தான் தேய்க்கணும்: அடித்துச் சொல்லும் மருத்துவர் சிவராமன்
உடலில் இருக்கும் பித்தம், கபம் ஆகியவற்றை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்காக எந்த எண்ணெய்யை பயன்படுத்த வேண்டும் என்று மருத்துவர் சிவராமன் தெரிவித்துள்ளார்.
உடலில் இருக்கும் பித்தம், கபம் ஆகியவற்றை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்காக எந்த எண்ணெய்யை பயன்படுத்த வேண்டும் என்று மருத்துவர் சிவராமன் தெரிவித்துள்ளார்.
இன்றைய காலகட்டத்தில் முடி உதிர்வு பிரச்சனைக்கு எண்ணெய் தேய்ப்பது பலன் அளிப்பதில்லை எனவும், தலைக்கு எண்ணெய் தேய்க்க வேண்டாம் என்றும் சிலர் கூறுகின்றனர். இதில் இருக்கும் உண்மைத் தன்மை குறித்த விளக்கத்தை மருத்துவர் சிவராமன் தெரிவித்துள்ளார். இது குறித்த தகவல்களை ஊடகவியலாளர் ஆவுடையப்பனுடனான நேர்காணலில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Advertisment
தலைமுடி முற்றிலும் வழுக்கையாக மாறிவிட்டால், அதில் எந்த விதமான எண்ணெய் அல்லது தைலம் தேய்த்தாலும் முடி வளர்வதற்கு வாய்ப்பு இல்லை என்று மருத்துவர் சிவராமன் தெரிவித்துள்ளார். அவர்கள் வேண்டுமானால் ஹேர் டிரான்ஸ்பிளான்டை செய்து கொள்ளலாம் என்று அவர் அறிவுறுத்துகிறார்.
எனினும், முடி வளர்ப்பதற்கும், எண்ணெய்க்கும் தொடர்பு இல்லை என்பதை தாம் ஏற்றுக் கொள்வதில்லை என்று மருத்துவர் சிவராமன் தெரிவித்துள்ளார். முடி வளர்ச்சிக்காக மட்டுமே எண்ணெய் தேய்ப்பதை கருதக் கூடாது. மருத்துவ குணங்களுக்காக தான் உச்சந்தலையில் எண்ணெய்யை பயன்படுத்துவதாக அவர் கூறுகிறார்.
தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்கும் போது நிச்சயமாக உடலில் மாற்றம் ஏற்படும் என்று மருத்துவர் சிவராமன் கூறுகிறார். இதன் காரணத்தால் தான், எண்ணெய் தேய்த்து குளித்த பின்னர் ரிலக்ஸான மனநிலை வருகிறது. சித்த மருத்துவத்தின் அடிப்படை புரிதலே தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்கும் போது பித்தம் குறையும் என்பது தான் என்று மருத்துவர் சிவராமன் தெரிவித்துள்ளார்.
Advertisment
Advertisements
அதன்படி, பித்தத்தை குறைப்பதற்கு நல்லெண்ணெய் உதவுவதால் அதனையே தலைக்கு தேய்க்கலாம் என்று மருத்துவர் சிவராமன் அறிவுறுத்துகிறார். ஆனால், கபம் காரணமாக உடலில் குளிர்ச்சி அதிகமாக இருப்பவர்கள் தேங்காய் எண்ணெய்யை தலைக்கு பயன்படுத்தலாம் என்று அவர் கூறுகிறார்.
எனவே, எண்ணெய் தேய்ப்பதால் தான் முடி வளர்கிறது எனக் கூறுவது ஏற்புடையது அல்ல என்று கூறும் சிவராமன், அதே வேளையில் எண்ணெய் தேய்ப்பதே தவறு என்று கூறுவதை மறுக்கிறார்.
நன்றி - Avudaiappan Talks
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.